Connect with us

Entertainment

அவசர சமையலுக்கு அருமையான டிப்ஸ்கள்

Published

on

அந்தக்காலம் மாதிரி இந்தக்காலம் இல்லை. கணவன் மட்டுமே அந்தக்காலத்தில் காடுகரை, வயல் என வேலை செய்ய செல்வான். பகல் முழுவதும் பாடுபட்டு உழைத்து களைத்து மாலை தான் வீடு திரும்புவான்.

அவனுக்கு பழைய சாதம் தான் மதிய உணவாக இருந்தது. பழைய சாதத்திற்கு கூட்டாக பழைய குழம்பு அல்லது வெங்காயம், மிளகாய் என்பன தான் அவனது சைடிஷ். ஒரு வடை கூட அப்போது கிடையாது.

பெண்கள் ஆற அமர சமையல் வேலை செய்யலாம். மாலை வரும் கணவனுக்கு உணவு சாப்பிடும் விதத்தில் அப்போதுதான் சூடான உணவைத் தயார் செய்வார்கள்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாறிப்போச்சு. ஆண்களே சில வீடுகளில் பெண்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார்கள்.

குடும்பத்திற்குள்ளேயே போட்டி மனப்பான்மை உருவாகி விட்டது. நீ மட்டும் தான் உழைக்க முடியுமா? நானும் தான் உழைக்கிறேன் என சரிசமமாக தன்னைக் கருதிக்கொண்டு பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், பெண்கள் காலையிலேயே எழுந்து அவசரம் அவசரமாக சமையல் வேலை செய்கின்றனர்.

ஏகப்பட்ட நெருக்கடி பெண்களுக்கு தான் என்றால் மிகையில்லை. கணவனை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் ஆபீஸ் கிளம்புவதற்குள் கவனிக்க வேண்டும். குழந்தைகளை ஸ்கூலுக்கு புறப்பட வைக்க வேண்டும். எப்பப்பா என அவர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

அவர்கள் எளிதில் இனி கிளம்பிச் செல்லலாம். சமையல் அவர்களுக்கு பெரிய தடையாக இருக்காது. அவர்களுக்காக அவசர சமையலுக்கு அருமையான டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக சமையலில் சவாலாக இருப்பது புளி கரைசல் தயாரிப்பு தான். அதாவது புளியைக் கரைக்க தான் கொஞ்சம் நேரம் தேவைப்படும். புளி கரைப்பது என்பது ரொம்பவே கஷ்டமான வேலை என்று பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை. நீங்கள் இதைச் செய்தால் போதும்.

பொதுவாக புளியைக் கரைக்கும் போது தண்ணீரில் கரைத்தால் எளிதில் கரையாது. வெந்நீரில் கரைத்தால் அதில் டேஸ்ட் மாறிவிடும்.

வெந்நீருடன் சிறிது உப்பு சேர்த்து கரைத்து விடுங்கள். அவ்வளவு தான். கரைப்பதற்கும் அதிக நேரம் ஆகாது. சுவையிலும் எந்த மாற்றமும் இருக்காது.

தேங்காய் வாங்pயதும் இரண்டாக உடைத்து அரை மணி நேரம் பிரிட்ஜின் ப்ரீசரில் வைங்க. பின்னர் அதை வெளியில் எடுத்து நீள நீளமான துண்டாக கட் பண்ணி அந்த துண்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து மீண்டும் ப்ரீசரில் போட்டு விடுங்கள். மாதக்கணக்கில் கூட தேங்காய் கெட்டுப்போகாது.

இட்லி மாவு அரைக்கும்போது உளுற்து அதிகமாக சேர்த்து கொஞ்சம் மாவை மட்டும் வடைக்கு என தனியாக எடுத்து வைங்க.

பிரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் வடை சுடலாம். வடை மிருதுவாக வேண்டுமானால் மாலை கைகளால் தட்டி பிசைந்து விடுங்க.

சிறிது நேரத்தில் மாவு பதத்திற்கு வந்து விடும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வடையை ஈசியாக போட்டு எடுத்து விடலாம்.

அசைவப்பிரியர்கள் என்றால் வாரம் வெள்ளி, செவ்வாயைத் தவிர 4 நாள்களும் அசைவமாகவே சாப்பிடுவார்கள். மீன், நண்டு, சிக்கன், மட்டன் என அவர்கள் விதவிதமாக சமையல் செய்வார்கள்.

அப்படிப்பட்டவர்கள் நாளை அசைவ உணவு தயார் செய்ய இன்றே மீன், மட்டன், சிக்கன் வாங்கி ஸ்டாக் வைப்பார்கள்.

அதை பிரிட்ஜில் அப்படியே வைத்தால் கவுச்சி வாடை அடிக்கும். இப்படி வராமல் இருக்க அசைவ உணவுகளை சுத்தமாக நீரால் கழுவி விடுங்க.
உடனே மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் கழுவிய அசைவ உணவை ஊற வைங்க.

பின்னர் சுத்தமான நீரில் அலசுங்க. இப்போது காற்றுப்புகாத ஒரு டப்பாவில் அடைத்து ப்ரீசரில் வைத்து விடுங்க. எந்த வாடையும் வராது. சமைக்கும்போது ருசியும் கூடுதலாக இருக்கும்.

பூண்டு மொத்தமாக வாங்கி வீட்டில் ஸ்டாக் வைப்பார்கள். சிலர் எப்படி வாங்கினோமோ அப்படியே வைத்து விடுவார்கள். பூண்டானது நாள்கள் செல்ல செல்ல கறுப்பாக ஆரம்பித்து விடும்.

அதில் பூஞ்சை பிடித்து அழுகி கெட்டு விடும். அதைத் தடுக்க நாம் பூண்டு வாங்கியதுமே வீட்டிற்கு வந்து அதற்கென ஒரு பிளாஸ்டிக் டப்பாவை ரெடி பண்ண வேண்டும்.

பூண்டின் தலைப்பகுதி மற்றும் காம்பு பகுதியை நீக்கி விட வேண்டும். டப்பாவில் சிறிது உப்பை போட்டு அதன் மேல் இந்த வெட்டப்பட்ட பூண்டைப் போட்டு வைத்தால் போதும்.

காற்று படும் படி டப்பாவைத் திறந்து வையுங்கள். எவ்வளவு நாள்களானாலும் பூண்டு கெடாது.

 

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Entertainment

காய்கறி சூப் செய்வது எப்படின்னு தெரியுமா?

Published

on

நாம் அசைவத்தில் உள்ள சத்துக்களுக்கு இணையான சத்துக்கள் சைவத்திலும் உண்டு என படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அசைவத்தில ஆட்டுக்கால், மாட்டுக்கால் மாட்டுவால் சூப் குடித்திருப்போம். அதனால் சளிக்கு நல்லது.

எலும்புகளுக்கு உறுதி என படித்தும் இருப்போம். அதற்கு இணையான சத்து சைவத்தில் காய்கறி சூப்பில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்?

வெங்காயம் – 1
கேரட் -1
பீன்ஸ் – 3
பச்சைப்பட்டாணி – கால் கப்
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 15
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை, உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் ஒன்றரை மேசைக்கரண்டி சோளமாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைங்க. இஞ்சி, பூண்டு பற்களை பரபரவென இடித்து வைங்க.

அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க. அதில் ஒரு பாத்திரத்தை வைங்க. இப்போது வெண்ணை சேர்த்து நல்லா உருக்குங்க. இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசத்தை நீக்க நல்லா வதக்குங்க.

பின்னர் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க. கடைசியாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்குங்க.

அவை நல்லா வெந்ததும், 4 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்க. அதனுடன் கொஞ்சம் உப்பு போடுங்க. இப்பவும் நல்லா கொதிக்க வைங்க. 20 நிமிடம் வரை கொதிக்க வைங்க.

நல்லா கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளை சேருங்க. கடைசியா அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது சூடான காய்கறி சூப் ரெடி..!

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending