Connect with us

Entertainment

மொறுமொறு முறுக்கு செய்வோமா?

Published

on

முறுக்கைப் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. கர கர மொறு மொறு என கடிக்கும் போது வரும் சத்தம் அலாதியானது. பற்களுக்கும் வலிமையைத் தரக்கூடிய ஒரு பலகாரம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கன் வரை சுவைத்து சாப்பிடுவர். பல் இல்லாதவர்கள் கூட காபியில் ஊற வைத்து சாப்பிடுவர். கைசுத்து முறுக்கு தான் ருசியானது. அனைவரும் வி.ரும்பக்கூடியது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா…?

என்னென்ன  பொருட்கள்

அரிசி மாவு – 4 கப்
உளுத்தம் மாவு – 1/2  கப்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 200 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நல்லா வறுத்துக்கோங்க. அதை மிக்ஸ்யில் போட்டு நல்லா அரைத்து விட்டு சல்லடையால் , சலித்து விடுங்க.

இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்துகக்கோங்க. .நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துகக்கோங்க. இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசைந்து விடுங்க.

மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரிங்க. .முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசையுங்க. .ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைங்க. ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டை மாவை எடுங்க.

கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றுங்க. கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடுங்க..

இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது என்பதை மறக்க வேண்டாம். தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.

அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைங்க.  பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்து எடுங்க.

இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுங்க. இப்போது.சுவையான கை முறுக்கு ரெடி…!

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Entertainment

காய்கறி சூப் செய்வது எப்படின்னு தெரியுமா?

Published

on

நாம் அசைவத்தில் உள்ள சத்துக்களுக்கு இணையான சத்துக்கள் சைவத்திலும் உண்டு என படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அசைவத்தில ஆட்டுக்கால், மாட்டுக்கால் மாட்டுவால் சூப் குடித்திருப்போம். அதனால் சளிக்கு நல்லது.

எலும்புகளுக்கு உறுதி என படித்தும் இருப்போம். அதற்கு இணையான சத்து சைவத்தில் காய்கறி சூப்பில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்?

வெங்காயம் – 1
கேரட் -1
பீன்ஸ் – 3
பச்சைப்பட்டாணி – கால் கப்
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 15
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை, உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் ஒன்றரை மேசைக்கரண்டி சோளமாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைங்க. இஞ்சி, பூண்டு பற்களை பரபரவென இடித்து வைங்க.

அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க. அதில் ஒரு பாத்திரத்தை வைங்க. இப்போது வெண்ணை சேர்த்து நல்லா உருக்குங்க. இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசத்தை நீக்க நல்லா வதக்குங்க.

பின்னர் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க. கடைசியாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்குங்க.

அவை நல்லா வெந்ததும், 4 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்க. அதனுடன் கொஞ்சம் உப்பு போடுங்க. இப்பவும் நல்லா கொதிக்க வைங்க. 20 நிமிடம் வரை கொதிக்க வைங்க.

நல்லா கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளை சேருங்க. கடைசியா அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது சூடான காய்கறி சூப் ரெடி..!

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending