Connect with us

Uncategorized

ரவா கேசரியில் இது புதுசு….ஈசியா எப்படி செய்வது?

Published

on

கேசரி என்றாலே எல்லோருக்கும் ஆசை தான். ரொம்பவே சாப்டான அந்த இனிப்பு யாருக்குத்தான் பிடிக்காது? அதனால் தான் கல்யாண வீடு, சடங்கு வீடு, கோவில் திருவிழாக்காலங்கள், தீபாவளி, பொங்கல் என அனைத்து விசேஷங்களிலும் காலை அல்லது மாலை டிபனில் தவறாமல் இடம்பிடிக்கிறது கேசரி.

இந்த கேசரி செய்வது ரொம்பவே சிம்பிள் தான். ஆனால் பக்குவம் தவறி விட்டால் கேசரி பாயாசம் மாதிரி ஆகி விடும். எந்த ஒரு சமையல் என்றாலும் பொருள்களின் அளவு தான் முக்கியம்.

அடுத்து செய்முறை. இந்த இரண்டும் தெரிந்தால் தான் சமையலில் ஜமாய்க்க முடியும். பெண்களின் சமையலுக்காகவே கட்டுண்டு கிடக்கும் கணவன்மார்கள் வீட்டில் மட்டுமே சாப்பிடுவார்கள்.

எவ்வளவு வயிறு பசித்தாலும் ஓட்டலில் சாப்பிடுவதில்லை என்ற கொள்கையில் இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் செய்யும் எந்த ஒரு சமையலானாலும் அது ரொம்பவே டேஸ்ட்டாக இருப்பது தான்.

அது சரி. இதை ஏன் சொல்கிறேன் என்றால், தினமும் ஒரே மாதிரியாக சமைத்துக் கொண்டே இருந்தால் அது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் சமையல் செய்பவர்களுக்குமே போரடிக்க ஆரம்பித்து விடும்.

புதுசு புதுசா ஏதாவது செய்து சாப்பிட்டால் தான் வாய்க்கு மட்டும் ருசி இல்லாமல் வாழ்க்கையே சுவாரசியமாக இருக்கும். இனி மேட்டருக்கு வருவோம். இப்போது புது ரவா கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்

ரவை – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி காய்ந்த திராட்சை – 15
பைன் ஆப்பிள் – 1 கப் (சிறு துண்டுகளாக வெட்டியது)
ஏலக்காய் பவுடர் – தேவைக்கேற்ப
கேசரி பவுடர் (மஞ்சள் நிறம்) – 1 டீ ஸ்பூன்
சர்க்கரை – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?
முதலில் 1 கப் ரவைக்கு 2 1/2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைங்க. பின்னர் ஒரு வாணலியை எடுத்துக்கோங்க. அதில் நெய் ஊற்றி அதோடு முந்திரி, திராட்சை ஆகியவற்றை நன்கு வறுத்து தனியாக எடுத்து வைங்க. பிறகு அதே வாணலியில் ரவையை போட்டு நல்லா வறுத்துக்கோங்க. எப்பவுமே சிம்மில் வைத்து வறுங்க. அதுதான் நல்லது.

அப்புறமா வறுத்த ரவையோடு கொதிக்க வைத்த தண்ணீரை சேருங்க. அப்படி சேர்த்ததும் கேசரி கட்டி ஆகாது.

சாப்பிடவும் ரொம்பவே சூப்பரா இருக்கும். தண்ணீர் விட்ட உடனே நல்லா கிளறி விடுங்க. பின்னர் அதோடு நறுக்கி வைத்த பைன் ஆப்பிள் துண்டுகள், ஏலக்காய் பவுடர், கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நல்லா கிளறி விடுங்க. அப்புறம் நல்லா கொதிக்கட்டும்.

இப்போது உங்க தேவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக்கோங்க. மீண்டும் நல்லா கிளறி விட்டு மூடி போட்டு விடுங்க. இப்போது நல்லா கொதிக்கட்டும்.

கொஞ்ச நேரம் கழித்து கேசரி பதம் வந்துரும். இப்போ மெது மெது என இருக்கும். இந்த பதத்தில் தான் முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நல்லா கிளறணும். அப்புறமா நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பைன் ஆப்பிள் ரவா கேசரி பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாதவாறு நல்லா கிளறுங்க.

இப்போ ஒரு பாத்திரத்தில் வைத்து உங்களுக்கு பிடித்த மாதிரி அழகா கட் செய்து பரிமாறுங்க. உங்களுக்கு பிடித்தமானவர்கள் உங்கள் சமையலுக்கு ஒரு சபாஷ் போடுவார்கள்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Uncategorized

சிக்லெட் சிக்லெட் சிக்கன் கட்லெட்…!

Published

on

கட்லெட் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். மசாலா தடவி உருளை வடிவில் பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்று ஆவல் பொங்கும். பெரும்பாலும் சைவமாக உருளைக்கிழங்கு போட்டு செய்து இருப்பார்கள். அசைவத்திலும் கட்லெட் உண்டு.

அதில் மட்டனை நல்லா அரைத்து செய்து இருப்பார்கள். அந்த வகையில் சிக்கனை வைத்து கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்

சிக்கன் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 2 நறுக்கியது
ரொட்டித்தூள் – 25 கிராம்
வெங்காயம் – 1 கையளவு
முட்டை – 1
உப்பு – தேவைக்கேற்ப
பாமாயில் – பொரிப்பதற்கு ஏற்ப
மைதா – 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீ ஸ்பூன்

எப்படி செய்வது?

சிக்கனை நல்லா தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளுங்க. அப்புறம் அடுப்பைப் பற்ற வைத்து வேக வைங்க. நல்லா ஆறியதும் மிக்சியில் போட்டு கொஞ்சம் சுற்றி விடுங்க. உருளைக்கிழங்கை வேக வைத்து நல்லா மசித்து விடுங்க.

சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து சிறு உருண்டைகளாக பிசைந்து உருட்டி கனமாகத் தட்டுங்க.

இதை அடித்து வைத்த முட்டையில் போட்டு நல்லா தோய்த்து எடுங்க. அப்புறம் ரொட்டித்தூள்ல போட்டு நல்லா புரட்டி எடுங்க. அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க.

வாணலியில் பாமாயில் விட்டு நல்லா காய விடுங்க. இப்போது உருளை வடிவிலான கட்லெட்டை காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க. நல்லா வெந்ததும் வெளியே எடுத்து சாப்பிடுங்க.

சாப்பிடும்போதே செம ருசியை நீங்கள் அனுபவிக்கலாம்.

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending