Connect with us

non- vegetarian

ரசித்து ருசிக்க இறால் பிரியாணி செய்யலாமா…

Published

on

இறால் ஒரு சிறந்த கடல் உணவு. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. கடலில் பெரிய பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு நல்ல உணவாக அமைகிறது.

இதில் கால்சியம், அயோடின் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிகமான கொழுப்பு காணப்படுகிறது. கொழுப்பா என்று பயந்து விடாதீர்கள். இது நன்மை தரும் கொழுப்பு தான்.

தமிழகத்தில் இறால் தொக்கு, குழம்பு, பிரியாணி பிரபலம். நாம் இப்போது இறால் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம்…!

என்னென்ன பொருட்கள்

இறால் – 1 கிலோ
பச்சை மிளகாய் – 8
கொத்தமல்லி இலைகள் – 1/4 கப்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
சீரகம் விதை தூள் – 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீ ஸ்பூன்
வெங்காயம் – 1 கப்
தக்காளி (நறுக்கியது) – 1/2 கப்
சமையல் எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நீர் – 3 டீ ஸ்பூன்
தேங்காய் பால் – 2 டீ ஸ்பூன்

பாசுமதி அரிசி – 2 கப்
இலவங்கப்பட்டை குச்சி – 1 அங்குலம்
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலைகள் – 2
கிராம்பு – 2
தண்ணீர் தேவைக்கு
நெய் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

எப்படி செய்வது?

அரிசியைக் கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் தண்ணீரை வேக வைக்க வேண்டும். கொதிக்கும்போது கரம் மசாலாவைச் சேர்க்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி அரிசி சேர்க்க வேண்டும்.

அரிசி வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, சமைத்த அரிசியை ஒதுக்கி வைக்க வேண்டும்.

பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி மற்றும் 3 டீ ஸ்பூன் தண்ணீரை நன்றாக பேஸ்ட் பதமாக்கி விட வேண்டும். அதை தனியாக வைக்க வேண்டும். இறால்களை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து தடவி காய விடவேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, இறால்களை 3 நிமிடம் லேசாக வறுத்து ஒதுக்கி வைக்க வேண்டும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். ஈரமான பேஸ்ட்டாக்கிய மசாலாவை சேர்த்து 5 நிமிடம் மிதமான வெப்பத்தில் வறுக்க வேண்டும்.

மீதமுள்ள மசாலா மற்றும் தக்காளியைச் சேர்த்து, எண்ணெய் வாணலியின் பக்கத்தை விட்டு வெளியேறும் வரை மிதமான வெப்பத்தில் வறுக்க வேண்டும்.

வறுத்த இறால்களைச் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வறுக்க வேண்டும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.

இப்போது அனைத்துப் பொருள்களையும் நெய் விட்டு புரட்டி எடுத்து, அரிசி ஒரு அடுக்கு போட வேண்டும். அதன் மேல் இறால் போட்டதும், மீண்டும் ஒரு அடுக்கு அரிசி போட வேண்டும்.

அடுப்பை 5 நிமிடம் முன் சூடாக்க வேண்டும். 350 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 20 நிமிடத்திற்கு வேக விட வேண்டும். தொடர்ந்து வறுத்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்க வேண்டும்.

இப்போது தயிர் வெங்காயத்தை தயார் செய்து கமகமக்கும் இறால் பிரியாணியுடன் சேர்த்து பரிமாறுங்கள்.

Continue Reading

non- vegetarian

மணமணக்கும் நெத்திலி மீன் குழம்பு

Published

on

மீன் குழம்பு பெயரை சொன்னாலே நாவில் நீர் ஊறும். அவ்ளோ ருசி…அவ்ளோ சத்துகள் நிறைந்தது தான் மீன் குழம்பு. அதிலும் நெத்திலி, சாலை என சிறு மீன்கள் ருசியே அலாதியானது. முள் அதிகமாக இருக்காது. நடுமுள் மட்டுமே இருக்கும். அப்படியே சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாமா…

என்னென்ன பொருள்கள்

நெத்திலி மீன் – 10
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 3 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1/2 டீ ஸ்பூன்
கடுகு விதை – 1/2 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 3
வெந்தயம் – 1 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
பாமாயில் – 1 டீஸ்பூன்

எப்படி செய்வது?

புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைங்க. நெத்திலி மீனை உப்பு, மஞ்சள் சேர்த்த தண்ணீர் விட்டு நல்லா கழுவுங்க. தேங்காயை நன்றாக அரைத்து தனியாக வைங்க. அடுப்பைப் பற்ற வைத்து வாணலியில் பாமாயில் ஊற்றி காய விடுங்க. கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு நல்லா வதக்குங்க. இப்போது தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் சமைத்துக்கோங்க.

இப்போது மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி பொடிகளை சேர்த்து நல்லா கலக்குங்க. இப்போது இஞ்சி, பூண்டு பேஸ்ட் போடுங்க. நல்லா பச்சை வாசனை போற வரை வதக்குங்க. கொஞ்சள் புளி சாறு சேர்த்து கொதிக்க விடுங்க. கிரேவியாக மாறினதும் பச்சை மிளகாயை உடைத்து சேருங்க.

தண்ணீர் நல்லா வற்றியதும் கழுவிய மீன்களை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. நல்லா வற்றி கெட்டியாகி மீன் குழம்பு வாசனை வரும் போது அடுப்பில் இருந்து
இறக்குங்க. சூடான குழம்பை சாதத்துடன் சேர்த்து பரிமாறுங்க. சாப்பிடுபவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க.

Continue Reading

Entertainment

செரிமானக் கோளாறை ஏற்படுத்தும் அசைவ உணவுகள்

Published

on

அசைவ உணவுகள் வளர்ந்து வரும் நவநாகரீக காலகட்டத்தில் அத்தியாவசியமாகி விட்டது. அசைவ உணவுகள் வளர்ந்து வரும் நவநாகரீக காலகட்டத்தில் அத்தியாவசியமாகி விட்டது.

கல்யாணம், சடங்கு, கொடை, தீபாவளி, பொங்கல் என எந்த ஒரு விசேஷம் என்றாலும் விருந்தில் அசைவம் இல்லையா எனத் தான் கேட்கிறார்கள். அதுதான் ருசி. அதில் தான் உடலுக்கு ஆரோக்கியம். அதுதான் பலம் என தங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் அசைவ உணவு தான் தரும் என்று இமேஜ் செய்து விடுகிறார்கள்.

அதிலிருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இது என்ன நாமா புதுசா கண்டுபிடித்துவிட்டோம். காலம் காலமாக இருந்து வரும் பழக்கம் தானே என சிலர் அதிமேதாவித்தனமாகவும் பேசுவதுண்டு. இன்னும் உண்மையைச் சொல்லப்போனால், அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுபவர்களே உடல் ஆரோக்கியமாக இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

விதாண்டவாதத்திற்காக வேண்டுமானால் ஒரு சிலர் அப்படி அல்ல. அசைவ உணவு உண்பவர்களும் உடல் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார்கள் என சொல்லலாம். நாம் சொல்வது நீண்ட நாள் ஆரோக்கியத்தை…உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அது சரி…அசைவ உணவை சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்? அதில் அப்படி என்ன தான் உள்ளது என்று அறிய ஆவலா… தொடர்ந்து படியுங்கள். இதனால் உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் என்று பார்ப்போம்.

பெண் குழந்தைகள் எளிதில் மேஜராகி விடுகிறார்கள்.

இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுகிறது.

உடல் பருமனாகிறது. செரிமானக்கோளாறை உண்டாக்கி மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

சாதாரணமாக காய்கறி கலந்த உணவுகள் செரிக்க 3-4 மணி நேரம் தான் ஆகிறது. அசை உணவுகளுக்கு 3 நாள்கள் ஆகுமாம்.

இரவு வேளைகளில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். யார் கேட்கிறார்கள்? அப்போதுதான் விருந்து என்ற பெயரில் மது அருந்தி விட்டு வயிறு புடைக்க சாப்பிடுகிறார்கள்.

தேவையற்ற கொழுப்புகள் உடலில் தங்கி விடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது.

கோபம், எரிச்சல், நிதானமின்மைக்குக் காரணமே இந்த அசைவ உணவுகள் தான்.

தினமும் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் என சத்தான சைவ உணவுகளை உட்கொண்டால் போதும். அசைவத்தில் உள்ள சத்துகள் இவற்றில் போதுமான அளவில் உள்ளன. உடலுக்கும் தீங்கு இல்லை. ஆனால் ஆசை யாரை விட்டது? சொல்வதை சொல்வி விட்டோம். அப்புறம் உங்கள் இஷ்டம்…!

Continue Reading

Entertainment

சிக்கன் 65 என்று பெயர் ஏன் வந்தது தெரியுமா?

Published

on

சிக்கன் 65 ஐக் கண்டாலே நாக்கில் எச்சில் ஊறும். செம ருசியான ஒரு சைடிஷ். இது முதல் முறையாக சென்னையில் உள்ள புகாரி ஓட்டலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை போன் மற்றும் போன்லெஸ் என இருவகைகளில் தயாரிக்கின்றனர்.

அதாவது எலும்புடன் அல்லது எலும்பு இல்லாமல் என்பது தான் இதன் பொருள். இதைத் தயாரிக்க இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு ஆகிய பொருள்களை சேர்மானமாக சேர்க்கின்றனர்.

இதுவே ஒரு சைடிஷ் தான். இதற்கும் ஒரு சைடிஷ் உள்ளது. இதற்கு பெஸ்ட் சைடிஷ் வெங்காயம் மற்றும் எலுமிச்சைச்சாறு. அதாவது எலுமிச்சைச்சாற்றை சிக்கன் 65ல் பிழிந்து விட்டு, நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் 50 கிராம் சாப்பிட வேண்டும் என நினைத்தால் 100கிராம் சாப்பிட்டு முடித்திருப்பீர்கள்.

தற்போது இதைச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது என்ற நிலைமையில் இந்த சைடிஷ் பாப்புலராகி விட்டது. இதையே சைவப்பிரியர்களும் சாப்பிட ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு வெஜ் 65 என்பது அவ்வளவு பொருத்தமாக இல்லாததால் பன்னீர் 65, கோபி 65 என்ற பெயரில் வலம் வருகிறது.

கோபி 65 என்றால் பூக்கோசு. காளான் 65 என்றால் காளான் வறுவல். மீன் மேக்கரிலும் சிக்கன் 65 போன்று தயார் செய்து திருமண வீடுகளில் சைவப்பரியர்களுக்கு என்று விருந்து படைக்கின்றனர்.

அது சரி. சிக்கன் 65க்கு அந்தப் பெயர் ஏன் வைத்தார்கள்? அதில் என்ன 65 துண்டுகளா உள்ளது. அல்லது 65 கோழிக்குஞ்சு உள்ளதா என்ற ஐயம் எழுகிறது. அது உண்மையா என்றால் அதுதான் இல்லை. இதன் பொருள் வேறு.

அதாவது, சிக்கன் 65 தயாரிக்க தேர்வு செய்யப்படும் கோழியின் வயதானது 65 நாள்களைக் கடந்து இருக்கக்கூடாது என்றும் சரியாக 65 நாள்களே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனையுடன் இந்த உணவு தயார் செய்யப்படுகிறது. இதுதான் உண்மை பொருள்.

ஒரு கோழியை சரியாக 65 துண்டுகளாக வெட்டுவதாகவும் சிலர் கூறுவதுண்டு. எது உங்களுக்கு சரியாகப்படுகிறதோ அதையே உங்கள் விடையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Continue Reading

Trending