Connect with us

Home

மிருதுவான இட்லியின் ரகசியம் இதுதாங்க..!

Published

on

இட்லியில் எத்தனையோ வெரைட்டிகள் வந்து விட்டன. இட்லியில் குஷ்பூ இட்லி வந்தது. சும்மா கும்முன்னு இருந்தது. இட்லியை எல்லோரும் பஞ்சு போல மிருதுவாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர்.

சில ஹோட்டல்களிலும், வீடுகளிலும் இட்லி கல்லு மாதிரி இருக்கும். ஏன்டா சாப்பிட வந்தோம் என இருக்கும். சாம்பாரும் அதிகமாக செல்லும்.

அனைவரும் விரும்பி சுவைக்கக் கூடிய உணவான இட்லியில் அற்புதமான பல சத்துக்கள் நிறைந்துள்ளன. காய்ச்சல் வந்தவர்களும் கூட இட்லியை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இட்லின்னா பூ மாதிரி இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அதாவது சாப்ஃடா இருக்க வேண்டும். ஆவியில் வேக வைக்கும் இந்த இட்லி பஞ்சு போல மெதுவாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

புழுங்கல் அரிசி – 4 டம்ளர்
உளுந்து – 1 டம்ளர்
வெந்தயம் – அரை டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

இட்லிக்குத்தானே என சாதாரண அரிசி உளுந்து போதும் என தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தாதீங்க. தரமான அரிசி மற்றும் உளுந்தைப் பயன்படுத்துங்க.

அதன்பின்னர் இவற்றை 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னரட உளுந்தைக் கழுவி வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மிக்சியில் போட்டு அரைத்து விடாதீங்க. அவ்வப்போது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக அரிசியை அரைத்து அதனுடன் கல் உப்பு போட்டு கரைத்து விடுங்கள். அரிசிமாவானது ரவை போன்று இருக்கக் கூடாது. அதை விட மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதே போல் உளுந்தும் மையாக அரைக்கப்பட வேண்டும்.

அரிசி மாவு அரைக்கும்போது அன்று வடித்த சாதத்தைக் கால் கப் சேர்த்து அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாக கிடைக்கும். கடைசியில் உளுந்து மாவை மையாக அரைத்த உடன் வழித்து எடுக்கும்போது பஞ்சு போல பந்து மாதிரி வர வேண்டும். அப்போது தான் நன்கு அரைத்ததற்குச் சமம்.

இந்த இரு மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்கு கைகளால் கலக்க வேண்டும். இரவு முழுவதும் புளிக்க விட வேண்டும். காலையில் புளித்து வைத்துள்ள மாவை எடுத்து வெண்துணி மீது இட்லிக்கு ஊற்றுங்கள்.

வேக வைத்ததும் எடுத்துப் பாருங்கள். என்ன ஒரு சாப்ட்….இட்லி..! இன்னும் ரெண்டு இட்லி குடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க…மிருதுவான இட்லியின் ரகசியம் இதுதான்..!

 

 

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending