Connect with us

Uncategorized

பத்தே நிமிடத்தில் செய்யலாம் குளுகுளு லஸ்ஸி

Published

on

மதிய வேளையில் வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்தால் நாம் அரக்கபரக்க என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திணறுவோம். கடைக்குச் சென்று தான் கூல்டிரிங்ஸ் வாங்க வேண்டும்.

அதுவும் கடை அருகில் இல்லாமலோ, அங்கு செல்ல ஆள் இல்லாமலோ போனால் ரொம்பவும் கஷ்;டம்தான். விருந்தினர்களுக்கு உரிய உபசாரம் செய்ய முடியவில்லையே என மனம் வேதனைப்படும்.

தமிழர்களின் சிறப்பு பண்பாடே விருந்தோம்பல் தான். அதனால் எப்போதும் உங்கள் வீட்டில் இதுபோன்ற பொருள்களை ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள். இனி கவலையை விடுங்க. நீங்கள் பத்தே நிமிடத்தில் குளுகுளு லஸ்ஸியை செய்யலாம். எப்படி செய்வது என்று பார்ப்போமா…

என்னென்ன பொருட்கள்

கெட்டித் தயிர் – ஒரு கப்
குங்குமப்பூ – சிறிதளவு
காய்ச்சி ஆற வைத்த பால் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
பிஸ்தா, பாதாம் துருவல் – தலா 2 டீஸ்பூன்.

எப்படி செய்வது?

பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றுங்கள்.

அதன் மேல் பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறுங்கள். சுவையுடன் கூடிய போஷாக்குமிக்க குளிர்பானம் இது.

இந்த ரெசிபியில் குங்குமப்பூவை ஏன் சேர்க்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

குங்குமப்பூ ‘சிவப்பு தங்கம்’ என்னும் பெயரில் அழைக்கபடுகிறது. குங்குமப்பூ உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாக உள்ளது.

பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூ உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது.

குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. ஏனெனில் குங்குமப்பூ அழகு, உணவு பொருட்களில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் நல பிரச்சனைகளான மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சரி செய்யவும் பயன்படுகிறது.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Uncategorized

சிக்லெட் சிக்லெட் சிக்கன் கட்லெட்…!

Published

on

கட்லெட் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். மசாலா தடவி உருளை வடிவில் பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்று ஆவல் பொங்கும். பெரும்பாலும் சைவமாக உருளைக்கிழங்கு போட்டு செய்து இருப்பார்கள். அசைவத்திலும் கட்லெட் உண்டு.

அதில் மட்டனை நல்லா அரைத்து செய்து இருப்பார்கள். அந்த வகையில் சிக்கனை வைத்து கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்

சிக்கன் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 2 நறுக்கியது
ரொட்டித்தூள் – 25 கிராம்
வெங்காயம் – 1 கையளவு
முட்டை – 1
உப்பு – தேவைக்கேற்ப
பாமாயில் – பொரிப்பதற்கு ஏற்ப
மைதா – 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீ ஸ்பூன்

எப்படி செய்வது?

சிக்கனை நல்லா தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளுங்க. அப்புறம் அடுப்பைப் பற்ற வைத்து வேக வைங்க. நல்லா ஆறியதும் மிக்சியில் போட்டு கொஞ்சம் சுற்றி விடுங்க. உருளைக்கிழங்கை வேக வைத்து நல்லா மசித்து விடுங்க.

சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து சிறு உருண்டைகளாக பிசைந்து உருட்டி கனமாகத் தட்டுங்க.

இதை அடித்து வைத்த முட்டையில் போட்டு நல்லா தோய்த்து எடுங்க. அப்புறம் ரொட்டித்தூள்ல போட்டு நல்லா புரட்டி எடுங்க. அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க.

வாணலியில் பாமாயில் விட்டு நல்லா காய விடுங்க. இப்போது உருளை வடிவிலான கட்லெட்டை காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க. நல்லா வெந்ததும் வெளியே எடுத்து சாப்பிடுங்க.

சாப்பிடும்போதே செம ருசியை நீங்கள் அனுபவிக்கலாம்.

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending