Connect with us

Entertainment

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா?

Published

on

தினமும் எவ்வளவு வேலை என சிலர் சொல்வார்கள். அவர்களுக்கு சாதாரண வேலை என்றாலும் கூட மிகப்பெரிய வேலையாகத் தெரியும். எந்த வேலை என்றாலும் நாம் சரியான முறையில் செய்தால் போதும். அது எளிதானதாக மாறிவிடும்.

நமக்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் நாம் அதை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையும் நமக்கு இல்லை என்று பாசிட்டிவ்வாக எண்ண வேண்டும். பிரச்சனை வந்தாலும் கூட வாழ்க்கைன்னா பிரச்சனை வந்தால் தான் சுவாரஸ்யம்.

நமக்கு வந்தால் நல்லது தானே. அப்போது தான் நமது திறமை வெளிப்படும். அதை எப்படி கையாள்வது என்ற சாமர்த்தியம் நமக்குள் இருந்து வெளிவரும். இப்படியே நாம் பாசிட்டிவ்வாக எண்ணி எதையும் கையாண்டால் போதும். பிரச்சனை வந்தால் கூட அது இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

இதை ஆராய்வதை விட அனுபவித்துப் பார்த்தால் தான் அதன் சுகம் தெரியும். அதே போல் தான் சிலருக்கு எப்போதும் சோம்பல் அல்லது சோர்வானது போன்ற முகம் இருந்தால் அதை நினைத்துக் கொண்டு நாம் நம் உடலே இப்படித் தான் என நொந்து போய் விடக்கூடாது.

எதையும் மாற்றக்கூடிய அல்லது சமாளிக்கக் கூடிய திறமை என்னிடம் உண்டு என்பதை இதுபோன்ற சமயங்களில் தான் மற்றவர்களிடம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அது இருக்கட்டும். இப்போது மேட்டருக்கு வரலாமே என்கிறீர்களா? சுறுசுறுப்பாக நம் உடலை எப்போதும் வைத்துக் கொள்வது எப்படி என்றால் அதற்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் தான். உடற்பயிற்சி என்றால் கடினமான உடற்பயிற்சிகள் என்று எண்ணி விடாதீர்கள்.

நம்மால் முடிந்த எளிய உடற்பயிற்சிகளையும் தினமும் செய்யலாம். உதாரணமாக காலை எழுந்ததும் வார்ம் அப் உடற்பயிற்சிகள், நடை பயிற்சி, யோகா செய்யலாம். அல்லது சைக்ளிங் செய்யலாம்.

உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதே போல் உணவு முறைகளும் அவசியம்.

எனர்ஜி தருவது ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். அத்தகைய உணவு எவை என்பதை நாம் பார்க்கலாம்.

நம் உடலுக்கு போதுமான ஆற்றல் இல்லாமல் போனாலும் நம்மால் சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்க முடியாது. சோம்பேரியாக நாம் இருந்து விட்டால் சோறு கிடைக்காது தம்பி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூட ஒரு பாடலில் பாடியிருப்பார்.

அதனால் சுறுசுறுப்பாக இருப்பது ஒன்றும் பெரிய மலை இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. உங்க உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் இந்த உணவுகளை சாப்பிடலாமே..!

கீரை வகைகள்

கீரை வகைகளில் எதுவானாலும் சரி. அதில் வைட்டமின் கே, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நல்ல எனர்ஜியை நம் உடலுக்குத் தருகிறது.

பாதாம் பருப்பு

பாதாமில் அதிகளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மோனோ சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி உள்ளது. அது மட்டுமல்லாமல் மெக்னீசியம் சத்தும் உள்ளது. இவை ஆற்றலை தந்து சோர்வைப் போக்குகிறது.

வாழைப்பழம்

பொட்டாசியம் அதிகம் உளள உணவு எது என்றால் அது வாழைப்பழம் தான். நமக்கு எளிதாக எங்கு சென்றாலும் கிடைக்கும். ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை வெளியிடுவதைக் குறைக்கிறது. மெக்னீசியம், வைட்டமின் பி ஆகியவற்றின் மூலமே இந்த வாழைப்பழம் தான்.

முட்டை

இதில் புரோட்டீன் சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உள்ளது. தினமும் 1 முட்டை சாப்பிட்டு வந்தால் நம் உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இரும்புச்சத்து, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 ஆகிய சத்துகளும் முட்டையில் உள்ளன.

பேரீச்சை

இதைச் சாப்பிட்ட உடனே நமக்கு ஆற்றல் கிடைத்து விடும். எளிதில் ஜீரணமாகி நமக்குத் தேவையான ஆற்றலைத் தந்து விடுகிறது. மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் அடங்கியுள்ளன.

7 பேரீச்சம் பழத்தை தினமும் இரவில் 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கூழ் போல் நசுக்கி இந்தக்கரைசலைக் குடிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இப்படி செய்து பாருங்கள். உங்களை விட்டு சோர்வு ஓடிப்போய் விடும்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Entertainment

காய்கறி சூப் செய்வது எப்படின்னு தெரியுமா?

Published

on

நாம் அசைவத்தில் உள்ள சத்துக்களுக்கு இணையான சத்துக்கள் சைவத்திலும் உண்டு என படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அசைவத்தில ஆட்டுக்கால், மாட்டுக்கால் மாட்டுவால் சூப் குடித்திருப்போம். அதனால் சளிக்கு நல்லது.

எலும்புகளுக்கு உறுதி என படித்தும் இருப்போம். அதற்கு இணையான சத்து சைவத்தில் காய்கறி சூப்பில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்?

வெங்காயம் – 1
கேரட் -1
பீன்ஸ் – 3
பச்சைப்பட்டாணி – கால் கப்
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 15
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை, உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் ஒன்றரை மேசைக்கரண்டி சோளமாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைங்க. இஞ்சி, பூண்டு பற்களை பரபரவென இடித்து வைங்க.

அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க. அதில் ஒரு பாத்திரத்தை வைங்க. இப்போது வெண்ணை சேர்த்து நல்லா உருக்குங்க. இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசத்தை நீக்க நல்லா வதக்குங்க.

பின்னர் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க. கடைசியாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்குங்க.

அவை நல்லா வெந்ததும், 4 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்க. அதனுடன் கொஞ்சம் உப்பு போடுங்க. இப்பவும் நல்லா கொதிக்க வைங்க. 20 நிமிடம் வரை கொதிக்க வைங்க.

நல்லா கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளை சேருங்க. கடைசியா அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது சூடான காய்கறி சூப் ரெடி..!

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending