Connect with us

Home

தாய்ப்பால் அதிகமாக சுரக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க…!

Published

on

குழந்தைகளுக்கு குறைந்தது முதல் 6 மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். சிலர் தங்கள் அழகு கெட்டுவிடுமே என தவறான புரிதலோடு தாய்ப்பால் கொடுக்கத் தயங்குவர்.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் நலனுக்காக மட்டுமில்லை. தாய்ப்பால் கொடுப்பது தாயின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட முடிகிறது.

சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா..

வெந்தயம்
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.

பேரிச்சம் பழம்
பேரிச்சையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இது ரத்தம் அதிகரிக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை உள்ளன.

பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குழந்தையும் நன்கு வளரும்.

பப்பாளி
பப்பாளி பழங்காலமாக பால் சுரப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியை ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடுவதன் மூலமாக பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெற்றிலை
வெற்றிலையின் பயன்கள் பற்றி நமக்கு அதிகமாக தெரியாது. இந்த வெற்றியிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

காட்டாமணக்கு இலை
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். இந்த இலை கிராமப் பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும்.

பாகற்காய்
பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

மேலும் பாகற்காயை உணவில் சேர்த்தால், இது பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது. குடற்புழுக்களை போக்க பாகற்காயை உண்ணலாம். இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.

முருங்கை கீரை
முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

கீரைகள்
உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம். கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை மறக்காமல் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலமர விழுது
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.

அருகம்புல் சாறு
அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். இது இரத்த சோகையை நீங்கி, ரத்தத்தை அதிகரிக்கும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்க இது உதவுகிறது. வயிற்றுப் புண்களை நீக்குகிறது.

பாதாம்

பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் தருகிறது.

பூண்டு
பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

கேழ்வரகு
கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

பால்
பால் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது. பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

பூண்டு பால்
தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

முட்டை

முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள், விட்டமின் ஏ, விட்டமின் பி2, பி12, ஒமேகா-3, கால்சியம், பாஸ்பரஸ், மினரல்கள் ஆகியவை உள்ளன. இது குழந்தைக்கு தேவையான அளவு புரதச்சத்தை கொடுக்கிறது. முட்டை தாய்ப்பாலின் அளவை மட்டும் அதிகரிக்காமல் தரத்தையும் அதிகரிக்கிறது.

முட்டை சாப்பிடுவதால் குழந்தைக்கு அலர்ஜி அதாவது வாந்தி, தடிப்புகள், அசௌகரியம், சுவாசப் பிரச்சனை, வாந்தி போன்றவை இருந்தால், முட்டை சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.

பாசிப்பருப்பு
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

ஒட்ஸ்
தாய்ப்பாலை அதிகரிக்க ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸ் கொழுப்பு குறைவான ஒன்று. இது தாய்ப்பாலை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கேரட்
கேரட்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ, சூப் செய்தோ சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

முருங்கை
முருங்கை கீரையை போலவே முருங்கை காய்க்கும் தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை காக்கவும் இது உதவியாக உள்ளது.

பால் சுறா
அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ்

தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் உங்களது உடலில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான அளவு நீரின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தம் ஓட்டம் சீராகிறது. இது பால் சுரப்பிற்கு உதவியாக இருக்கிறது.

பிரவுன் ரைஸ்

பிரவுன் ரைஸ் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தாய்ப்பால் சுரப்பிற்கான ஹார்மோனை தூண்டி விட்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. பிரவுன் ரைஸை சமைத்து, இதனுடன் சத்தான காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending