Connect with us

Uncategorized

சுண்டல் குருமா எப்படி செய்வது?

Published

on

குருமா என்றாலே சுண்டல் கண்டிப்பாக இடம்பெறும். அது தான் செம ருசியாக இருக்கும். சப்பாத்திக்கு சரியான சைடிஷ் என்றால் அது இந்த குருமா தான்.

இந்த குருமா கறி குருமாவையே மிஞ்சி விடும். கருப்பு சுண்டல் தான் சத்து அதிகம். ஆனால் வெள்ளை சுண்டலையும் பயன்படுத்தலாம்.
என்னென்ன பொருள்கள்

கருப்பு கொண்டைக்கடலை – 1/4 கிலோ
பாமாயில் – தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் – 1 கப்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1ஃ2 டீ ஸ்பூன்
ஏலக்காய் – 2
முந்திரி பருப்பு – 10
கிராம்பு – 2
பட்டை -1
கசகசா – 1ஃ2 டீ ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பழுத்த தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
வெறும் மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கருவேப்பிலை, மல்லித்தழை (நறுக்கியது) – சிறிது

எப்படி செய்வது?

முந்தைய நாளே கொண்டைக்கடலையை ஊற வைத்து விட வேண்டும். குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் அரைக்கத் தேவையான தேங்காய் துருவல், சோம்பு, மிளகு, ஏலக்காய், முந்திரி பருப்பு, கிராம்பு, பட்டை, கசகசா, பொட்டுக்கடலை ஆகியவை போட்டு நல்லா அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் குக்கரை வைங்க. தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றுங்க. நல்லா சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்க.

சீரகம் சேருங்க. இஞ்சி பூண்டு விழுதைப் போடுங்க. பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்குங்க.

சிறிது நேரம் சென்றதும் தக்காளி சேருங்க. தக்காளி வதங்க கொஞ்சம் உப்பு சேருங்க. அப்புறம் மசாலா பொருள்களை சேருங்க. அதுக்கப்புறமா மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் ஆகியவற்றை சேருங்க.

மசாலா பிடிக்கலைன்னா குழம்பு மிளகாய் தூளை கொஞ்சமா போட்டு நல்லா வதக்கினால் போதும். உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவற்றை ஒரு கப் அளவு சேருங்க.

கடைசியா அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, கொஞ்மா உப்பு போட்டு கலந்து விடுங்க. இப்போ உப்பு, காரம் சரியா இருக்குதான்னு பாருங்க. சரியா இருந்தா இறக்கிடுங்க. சூடான சுவையான சுண்டல் குருமா ரெடியாகிடும்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Uncategorized

சிக்லெட் சிக்லெட் சிக்கன் கட்லெட்…!

Published

on

கட்லெட் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். மசாலா தடவி உருளை வடிவில் பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்று ஆவல் பொங்கும். பெரும்பாலும் சைவமாக உருளைக்கிழங்கு போட்டு செய்து இருப்பார்கள். அசைவத்திலும் கட்லெட் உண்டு.

அதில் மட்டனை நல்லா அரைத்து செய்து இருப்பார்கள். அந்த வகையில் சிக்கனை வைத்து கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்

சிக்கன் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 2 நறுக்கியது
ரொட்டித்தூள் – 25 கிராம்
வெங்காயம் – 1 கையளவு
முட்டை – 1
உப்பு – தேவைக்கேற்ப
பாமாயில் – பொரிப்பதற்கு ஏற்ப
மைதா – 2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீ ஸ்பூன்

எப்படி செய்வது?

சிக்கனை நல்லா தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளுங்க. அப்புறம் அடுப்பைப் பற்ற வைத்து வேக வைங்க. நல்லா ஆறியதும் மிக்சியில் போட்டு கொஞ்சம் சுற்றி விடுங்க. உருளைக்கிழங்கை வேக வைத்து நல்லா மசித்து விடுங்க.

சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து சிறு உருண்டைகளாக பிசைந்து உருட்டி கனமாகத் தட்டுங்க.

இதை அடித்து வைத்த முட்டையில் போட்டு நல்லா தோய்த்து எடுங்க. அப்புறம் ரொட்டித்தூள்ல போட்டு நல்லா புரட்டி எடுங்க. அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க.

வாணலியில் பாமாயில் விட்டு நல்லா காய விடுங்க. இப்போது உருளை வடிவிலான கட்லெட்டை காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க. நல்லா வெந்ததும் வெளியே எடுத்து சாப்பிடுங்க.

சாப்பிடும்போதே செம ருசியை நீங்கள் அனுபவிக்கலாம்.

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending