Connect with us

Entertainment

சீனி சாப்பிட்டால் ஆபத்தா? கொஞ்சம் யோசிங்க… பாஸ்!

Published

on

நாம் அன்றாடம் குடிக்கும் டீயில் இருந்து காபி, இனிப்பு போண்டா, மிட்டாய், கேக் என எத்தனையோ உணவுகள் சீனியில் தான் தயாராகின்றன. அவை அனைத்தும் நம் உடலில் சென்று என்ன பாதிப்பை உண்டாக்கும் என்று நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் நாம் ஒன்றுமே சாப்பிட முடியாது.

அவ்ளோ பயம் வந்து விடும். சீனியை சிலர் அப்படியே அள்ளி சாப்பிடுவதையும் பார்த்திருப்போம். பெரும்பாலும் சிறுவர்கள் தான் இந்த சேட்டையைப் பண்ணுவார்கள்.

சீனியில் அப்படி என்ன தான் உள்ளது என்கிறீர்களா? உங்கள் சட்டைக்காலரில் கொஞ்சம் அழுக்கல்ல. அதிகமாக அழுக்கு படியும் இடம் அதுதான். அதை கொஞ்சம் சீனியை வைத்து தேய்த்துப் பாருங்க. ஒரு நொடியில் போக்கி விடும்.

அவ்ளோ அழுக்கையும் ஈசியா போக்குதுன்னா இந்த சீனியில எவ்ளோ கெமிக்கல்ஸ் கலந்துருப்பாங்கன்னு யோசிச்சுப்பாருங்க.

அதிலும் நமக்கு வெள்ளை வெளேர்னு சீனி எப்படி கிடைக்கும்? கெமிக்கல்ஸ் சேர்த்தால் மட்டும் தான் அப்படி கிடைக்கும். கரும்பிலிருந்து தான் சர்க்கரை எனப்படும் சீனி கிடைக்கிறது.

இது லைட் மஞ்சள் நிறத்தில் தான் வரும். அதனுடன் பிளீச்சிங் பவுடர் கலந்தால் தான் வெள்ளை வெளேர்னு மாறும். அல்லது குளோரினைக் கலப்பார்கள்.

அது சரி. சீனி எப்படி அழுக்கை நீக்கியது என சந்தேகம் வருகிறதா? கரும்பைப் பிழிந்த சாறுடன் 60-70 டிகிரி சென்டிகிரேடு அளவில் பாஸ்போரிக் ஆசிட்டை லிட்டருக்கு 200 மில்லி கலந்து சூடுபண்ணுவாங்க. இந்த ஆசிட் தான் அழுக்கை நீக்குகிறது.

அப்புறமா சுண்ணாம்பு 0.2 சதவீதம் சேர்த்து சல்பர் – டை- ஆக்சைடை செலுத்துகிறார்கள். 102 டிகிரி சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தறாங்க.

இதனால, நல்ல வைட்டமின்களை இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேருகிறது. பின்னர் பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கிறாங்க. இதனால நமக்கு தெளிவான சாறு கிடைக்கிறது.

அதுக்கப்புறமாவது விடுறாங்களான்னா இல்லை. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸாக தயாரிக்கிறாங்க.

பின்னர் சல்பர் – டை – ஆக்சைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிக நிலைக்கு மாறி நாம பயன்படுத்துற சீனியாக நமக்கு கிடைக்கிறது.

இதில சல்பர் – டை – ஆக்சைடு எனப்படும் நஞ்சு பொருள் சீனியில் கலந்து விடுகிறது. சீனி தயாரித்ததும் மிச்சம் வரும் பொருள் என்னன்னா அது கரி தான். அதைத் தான் கார்பன் என்கிறோம்.

சீனி தயாரித்து 6 மாதம் மட்டுமே கேரண்டி. அதற்குள் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் உள்ள நஞ்சுவான சல்பர்-டை-ஆக்சைடு ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியமுள்ள நஞ்சாகி விடுகிறது.

இப்போது அது சரிங்க…இப்படிப்பட்ட சீனியால் வரும் தொல்லைகள் தான் என்ன எனக் கேட்பீர்கள்…ஒன்றல்ல ரெண்டல்ல…ஏராளமான தொல்லைகள் உள்ளன. அவற்றில் சில சாம்பிள்கள் உங்கள் பார்வைக்கு.

குடல் புண் உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்சனைகள், பல் வலி, சளித்தொல்லை, உடல் பருமன், இதய நோய் மற்றும் சுகர், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் சீனி தான்.

இதுக்குப் பதிலாக நாம பனை வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரையை சாப்பிட்டால் ரத்த அழுத்தம், இதய நோய், சுகர் என எதுவுமே கிட்ட வராது.

அதனால செயற்கையா தயாரிக்கிற சீனியை விட்டுருங்க. இயற்கையிலேயே தயாராகும் இனிப்புப் பொருள்களை சாப்பிடுங்க..! இதனால நோயே நம்மை அண்டாது.

 

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Entertainment

காய்கறி சூப் செய்வது எப்படின்னு தெரியுமா?

Published

on

நாம் அசைவத்தில் உள்ள சத்துக்களுக்கு இணையான சத்துக்கள் சைவத்திலும் உண்டு என படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அசைவத்தில ஆட்டுக்கால், மாட்டுக்கால் மாட்டுவால் சூப் குடித்திருப்போம். அதனால் சளிக்கு நல்லது.

எலும்புகளுக்கு உறுதி என படித்தும் இருப்போம். அதற்கு இணையான சத்து சைவத்தில் காய்கறி சூப்பில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்?

வெங்காயம் – 1
கேரட் -1
பீன்ஸ் – 3
பச்சைப்பட்டாணி – கால் கப்
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 15
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை, உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் ஒன்றரை மேசைக்கரண்டி சோளமாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைங்க. இஞ்சி, பூண்டு பற்களை பரபரவென இடித்து வைங்க.

அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க. அதில் ஒரு பாத்திரத்தை வைங்க. இப்போது வெண்ணை சேர்த்து நல்லா உருக்குங்க. இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசத்தை நீக்க நல்லா வதக்குங்க.

பின்னர் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க. கடைசியாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்குங்க.

அவை நல்லா வெந்ததும், 4 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்க. அதனுடன் கொஞ்சம் உப்பு போடுங்க. இப்பவும் நல்லா கொதிக்க வைங்க. 20 நிமிடம் வரை கொதிக்க வைங்க.

நல்லா கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளை சேருங்க. கடைசியா அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது சூடான காய்கறி சூப் ரெடி..!

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending