Connect with us

vegetarian

காய்கறி பாசிப்பயறு கிச்சடி

Published

on

குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுப்பது அவசியம். அப்போதுதான் அவர்களது வளர்ச்சி ஒரே சீரானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான காலை உணவு தான் இது.

ஒரு ஹெல்த்தியான பிரேக்ஃபாஸ்ட் வெஜ் மூங்தால் கிச்சடி. அதாவது பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி. இது ஒரு கப் தயிர் ஒரு அப்பளத்தோடு பரிமாறக்கூடிய எளிமையான வசதியான ஒரு உணவு.

காய்கறி பாசிப்பயறு கிச்சடி ஆரோக்கியமானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எளிதில் சமைத்து விடக்கூடிய ஈஸியான உணவு பாசிப்பயறு கிச்சடி. எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க…

என்னென்ன பொருள்கள்

3/4 கப் பாசிப் பருப்பு
1/4 கப் அரிசி
1 தக்காளி
1 கப் கேரட்
1 கப் முட்டைக்கோசு
1 கப் பட்டாணி
1/2 கப் குடை மிளகாய்
1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1 பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி நெய்
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மிளகாய் பொடி
1/2 தேக்கரண்டி மஞ்சள்
தேவையான அளவு பெருங்காயம்
1 தேக்கரண்டி சீரகம்

எப்படி செய்வது?

ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். அதிலேயே கழுவிய அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விடுங்கள். அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் உப்பையும் மஞ்சளையும் அதில் சேர்த்து, குக்கரை மூடி 6 முதல் 7 விசில் வரும் வரை வேக விடுங்கள்.

ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் பெருங்காயம், சீரகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்லா வதக்குங்கள். இப்போது இதில் நறுக்கிய கேரட், முட்டைக்கோஸை சேர்த்து வதக்குங்கள். பிறகு பச்சை பட்டாணியும் சேர்த்து தொடர்ந்து வதக்க வேண்டும்.

இப்போது இந்த கலவையில் நறுக்கிய குடை மிளகாயையும் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் எல்லாம் நன்கு வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பச்சை மிளகாயையும் சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு சிகப்பு மிளகாய்த் தூள் ஆகிய பொருட்களை போட்டு எல்லா பொருட்களையும் நன்கு கலந்துவிட்டு மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வேக விடுங்கள்.

இப்போது ஏற்கனவே குக்கரில் வேகவைத்த அரிசி பருப்பு கலவையை குக்கர் ஆறியதும் திறந்து, அதில் காய்கறி மசாலா கலவையை சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

சூடாக இருக்கும்போதே மேலாக 1 ஸ்பூன் நெய்யை விட்டு கலந்து சூடாக பரிமாறுங்கள்.

 

 

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Entertainment

காய்கறி சூப் செய்வது எப்படின்னு தெரியுமா?

Published

on

நாம் அசைவத்தில் உள்ள சத்துக்களுக்கு இணையான சத்துக்கள் சைவத்திலும் உண்டு என படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அசைவத்தில ஆட்டுக்கால், மாட்டுக்கால் மாட்டுவால் சூப் குடித்திருப்போம். அதனால் சளிக்கு நல்லது.

எலும்புகளுக்கு உறுதி என படித்தும் இருப்போம். அதற்கு இணையான சத்து சைவத்தில் காய்கறி சூப்பில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்?

வெங்காயம் – 1
கேரட் -1
பீன்ஸ் – 3
பச்சைப்பட்டாணி – கால் கப்
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 15
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை, உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் ஒன்றரை மேசைக்கரண்டி சோளமாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைங்க. இஞ்சி, பூண்டு பற்களை பரபரவென இடித்து வைங்க.

அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க. அதில் ஒரு பாத்திரத்தை வைங்க. இப்போது வெண்ணை சேர்த்து நல்லா உருக்குங்க. இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசத்தை நீக்க நல்லா வதக்குங்க.

பின்னர் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க. கடைசியாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்குங்க.

அவை நல்லா வெந்ததும், 4 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்க. அதனுடன் கொஞ்சம் உப்பு போடுங்க. இப்பவும் நல்லா கொதிக்க வைங்க. 20 நிமிடம் வரை கொதிக்க வைங்க.

நல்லா கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளை சேருங்க. கடைசியா அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது சூடான காய்கறி சூப் ரெடி..!

Continue Reading

Home

புரதச்சத்துகள் நிறைந்த காலிஃப்ளவர் பொரியல் செய்வோமா..

Published

on

பிராக்கலியைப் பார்க்கும்போதே அதை பொரித்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். இதில் அசைவ உணவில் உள்ள சத்துகளை விட அதிகளவில் புரதச்சத்து உள்ளது.
இந்த பிராக்கலியைப் பூக்கோசு என்றும்  காலிஃப்ளவர் சொல்வர். பார்ப்பதற்கு பூக்களின் தொகுப்பாக இருக்கும். பூக்கோசு பொரியலை நாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்

பிராக்கலி – 300 கிராம்
தேங்காய் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காய் – 1
காய்ந்த மிளகாய் – 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்
சிக்கன் மசாலா – 1/2 ஸ்பூன்
கார மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பாமாயில் – 4 ஸ்பூன்

எப்படி செய்வது

பிராக்கலியை சுத்தமாக நல்லா கழுவுங்க. பின்னர் அதைப் பொடிப்பொடியாக நறுக்கி வைங்க. பெரிய வெங்காயத்தையும் நீள நீளமாக அரிந்து கொள்ளுங்கள். காய்ந்த மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கோங்க.

இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் வாணலியை வைங்க. 4 ஸ்பூன் எண்ணையை விடுங்க. நல்லா காய்ந்ததும் கடுகு, சீரகம் தலா அரை கரண்டியை சேர்த்து தாளிங்க. அதோடு நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறம் வரும் வரை நல்லா வதக்குங்க. அப்புறமா காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்த பிராக்கலி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.

துருவிய தேங்காயை ஒரு அரை கப் சேருங்க. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கறி மசாலா ஆகியவற்றைப் போடுங்க. நல்லா வதக்குங்க. அடுப்பில் தீயைக் குறைத்து வைங்க. அவ்வப்போது நல்லா கிளறி விடுங்க. கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நல்லா கிளறிவிடுங்க.

இப்போது ஒரு 5 நிமிடம் மூடி போட்டு நல்லா வேக விடுங்க. நறுக்கிய கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து ஒரு கிளறு கிளறிவிடுங்க. அடுப்பில் இருந்து இறக்குங்க. சூடான சுவையான பிராக்கலி பொரியல் ரெடி…!

Continue Reading

Trending