Connect with us

Entertainment

எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு மின்ன வேண்டுமா?

Published

on

அந்தக்காலத்தில் எம்ஜிஆர் உடல் சும்மா தகதகன்னு மின்னும். அதற்கு காரணம் அவர் தங்க பஸ்பம் சாப்பிட்டதாகச் சொல்வர். ஆனால் அவரைப் போலவே பலரும் தங்கள் உடலை மெருகூட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

இன்று வரை அந்த ஆசை தொடர்கிறது. இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சித்த வைத்தியத்தில் எத்தனையோ மருந்துகள் உள்ளன. என்றாலும், நாம் வீட்டில் எளிமையாகக் கிடைக்கும் சில பொருள்களை வைத்து எப்படி மின்னுவது என்று பார்க்கலாம்.

உடலைப் போல் சும்மா தகதகன்னு மின்ன வேண்டும் என்று பலரும் விரும்புவர்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் சும்மா தங்கம் மாதிரி தகதகன்னு மின்ன ஆரம்பிச்சிடும்.

ஆரஞ்சு பழத்தை ரெண்டா வெட்டி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற விடுங்க. இப்போது சோப்பு போட்டு குளிர்ந்த நீரில் கழுவுங்க. தினமும் இப்படி செய்தால் உங்கள் முகம் பளபளப்பாகவும், இளமைப்பொலிவுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சைச் சாற்றைத் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடி வளர்வது குறைந்து முகம் அழகாகத் தோற்றம் அளிக்கும்.

பருமனாக இரப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சைச் சாறை பிழிந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். அது உடல் எடையை விரைவில் குறைத்து விடும்.

நகத்தை அழகாக வெட்ட வேண்டுமா? அப்படின்னா இதைச் செய்யுங்க. நகத்தை வெட்டுவதற்கு முன் எண்ணெயைத் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து உங்கள் நகத்தை உங்கள் விருப்பப்படி அழகாக வெட்டலாம்.

உடல் தான் பளபளன்னு இருக்கே. முடி தான அப்படி இல்லன்னு உங்களுக்கு கவலை வந்தால் கவலையை விடுங்க. தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் டீத்தூளை எடுங்க. அதனுடன் கொஞ்சமா எலுமிச்சைச் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிங்க. உங்க முடி பளபளன்னு மாறிவிடும்.

இளம் சூடான 1 லிட்டர் நீரில் 2 ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால், கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக உள்ளதா? அந்த இடத்தில் எலுமிச்சைச் சாற்றை தேய்த்து சோப்பு போட்டுக் குளிங்க. நாளடைவில் கறுப்பு மறைந்து விடும்.

தோல் வறண்டு சுருக்கமாக இருக்கிறதா? டோண்ட் ஒர்ரி. ஆலிவ் ஆயிலைப் பூசி சிறிது நேரம் ஊற வைத்து சோப்பு போட்டு குளிங்க.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் மறக்காம இதைச் செய்யுங்க. உங்க முகம் பளபளப்பாக மாறி விடும்.

புதினா சாறு 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைச் சாறு, பயிற்றம்பருப்பு மாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற விடுங்க. பின்னர் ஐஸ் ஒத்தடம் கொடுங்க. முகம் சுத்தமாகும். பருவினால் உண்டான தழும்பும் மறைந்து விடும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி குளிங்க. அழகாவும், பளபளன்னும் உங்கள் தோல் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Entertainment

காய்கறி சூப் செய்வது எப்படின்னு தெரியுமா?

Published

on

நாம் அசைவத்தில் உள்ள சத்துக்களுக்கு இணையான சத்துக்கள் சைவத்திலும் உண்டு என படித்திருக்கிறோம். உதாரணத்திற்கு அசைவத்தில ஆட்டுக்கால், மாட்டுக்கால் மாட்டுவால் சூப் குடித்திருப்போம். அதனால் சளிக்கு நல்லது.

எலும்புகளுக்கு உறுதி என படித்தும் இருப்போம். அதற்கு இணையான சத்து சைவத்தில் காய்கறி சூப்பில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

இனி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

என்னென்ன பொருள்கள்?

வெங்காயம் – 1
கேரட் -1
பீன்ஸ் – 3
பச்சைப்பட்டாணி – கால் கப்
சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 15
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை, உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் ஒன்றரை மேசைக்கரண்டி சோளமாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைங்க. இஞ்சி, பூண்டு பற்களை பரபரவென இடித்து வைங்க.

அப்புறம் அடுப்பைப் பற்ற வைங்க. அதில் ஒரு பாத்திரத்தை வைங்க. இப்போது வெண்ணை சேர்த்து நல்லா உருக்குங்க. இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசத்தை நீக்க நல்லா வதக்குங்க.

பின்னர் அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்க. கடைசியாக கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நல்லா வதக்குங்க.

அவை நல்லா வெந்ததும், 4 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்க. அதனுடன் கொஞ்சம் உப்பு போடுங்க. இப்பவும் நல்லா கொதிக்க வைங்க. 20 நிமிடம் வரை கொதிக்க வைங்க.

நல்லா கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளை சேருங்க. கடைசியா அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது சூடான காய்கறி சூப் ரெடி..!

Continue Reading

Entertainment

கழுத்து வலியா…பயப்படாதீங்க…ஈசியா போக்கலாம்…!

Published

on

நாம் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். அதிலும் நாற்காலியில் அமர்ந்து கணினி இயக்கும் வேலையைப் பார்ப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அங்க புடிச்சுக்கிட்டு…இங்க புடிச்சுகக்கிட்டு…கழுத்து வலிக்குது…தோள்பட்டை வலிக்குது…ன்னு வலியால் புலம்ப ஆரம்பித்து விடுவர்.

இதற்கு காரணம் சேர்ல தான் உட்காருகிறோமே…எப்படி இருந்தால் என்ன? என்று அசால்ட்டாக அங்கும் இங்கும் ஸ்டைலாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது தான். வேலையின் கவனத்தில் முக்கால்வாசி பேர் கழுத்தை ஒழுங்காக வைப்பதில்லை. ஒரு சைடாக சாய்த்து வைத்துக் கொள்கின்றனர்.

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யக்கூடாது. இடையிடையே எழுந்து நடந்து சென்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு மீண்டும் வேலை பார்க்கலாம்.

முதுகை நேராக வைக்காமல், கழுத்தை நேராக வைக்காமல் வேலை செய்யும்போது தான் கழுத்துப்பிடிப்பு, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தலை நேராக இருக்கும்போது கழுத்தில் அதிகமாக அழுத்தம் இருக்காது. தலையை சாய்த்து இருக்கும்போது தலையின் எடையை கழுத்து தாங்கிக் கொள்ள சிரமப்படும். அதாவது 20 கிலோ வரை அது சுமக்க வேண்டும். நேராக இருந்தால் வெறும் 4 கிலோ சுமந்தால் போதும்.

இதிலிருந்து மீள என்ன தான் வழி?

கணினி பயன்படுத்துபவர்கள் கண் எதிரே மானிட்டர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நாற்காலியிலோ, தரையிலோ உட்காரும்போது முதுகுத்தண்டுவடமும், கழுத்தும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் தலையை கீழ்நோக்கி பார்க்காதீர்கள். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம்.

கழுத்தில் உள்ள சுளுக்குகள் போக வேண்டும் எனில் தலையை 360 டிகிரிக்கு வட்டமாக மார்பை ஒட்டியும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என தலா 3 முறை சுற்ற வேண்டும். அப்போது நமது கழுத்தில் உள்ள சுளுக்குகள் ஒவ்வொன்றாக விடுபடுவதை நாமே உணரலாம்.

கழுத்துத் தசைகளானது காய்ந்து போகாமல் அவ்வப்போது ஈரப்படுத்துங்கள். இறுக்கமான கழுத்திற்கு தண்ணீரைக் கொண்டு கழுவும்போது தளர்வடைந்து விடும். அதன்பிறகு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.

கழுத்துப்பகுதியில் உள்ள மென்திசுக்கள் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்படும். அதனால் சன்ஸ்கரீன் தடவலாம். இதனால் கழுத்துப்பகுதியில் சுருக்கங்கள் உண்டாவதையும் தவிர்க்கலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கழுத்துப்பகுதியைச் சுற்றிலும் சுத்தப்படுத்துங்கள். இதைத் தினமும் செய்து வந்தால் நல்லா தூக்கம் வரும். வயதான போது தோல் சுருக்கமும் எளிதில் வருவதில்லை. கழுத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தி குளிர்ச்சிப்படுத்தினால் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும் என்பது அறிவியல் உண்மை.

 

Continue Reading

Trending