Connect with us

Home

எப்பப்பா….! என்ன ஒரு அலுப்பு…? அதீத அசதி தீர…என்ன செய்யலாம்?

Published

on

பொதுவாக மனிதனுக்கு அசதி வருவது இயற்கை தான். இது எப்போது வருகிறது என்றால் பகல் முழுவதும் கடினமான வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கு இரவில் வரும். இவர்கள் படுத்தவுடன் தூங்கி விடுவர். அந்த அளவு அசதி இருக்கும்.

இடையில் எழவே மாட்டார்கள். அதன் பின் எழும் இவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மறுநாள் காலையில் வேலைக்குச் சென்று விடுவர்.
அதனால், பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும். ஆனால், நாள்பட்ட சோர்வு நோய் காரணமாக வரும் அசதி என்பது தூங்கினாலும் சரியாகாது. இதற்குச் சரியான காரணம் என்ன என்றே தெரியவில்லை.

மன அழுத்தம், குடும்பச் சூழ்நிலை, வேலையில் விருப்பமின்மை போன்ற காரணங்களாலும் இந்த வகையான அசதி ஏற்படலாம். 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது.

தசை வலி, தலைவலி, அதீதச் சோர்வு போன்றவை 6 மாதங்களுக்கு மேல் இதில் நீடித்திருக்கலாம். உடற்பயிற்சி செய்தாலும் சோர்வுவரும். காலை எழுந்தவுடன் அசதியாகக் காணப்படும். மறதி ஏற்படும், மனதின் ஒருமுகத்தன்மை குறையும், குழப்பம் வரும், மூட்டு வலி வரும் ஆனால் வீங்காது, சிவக்காது.

இந்த வகை அசதிக்கு எனச் சிறப்புப் பரிசோதனைகள் ஒன்றும் இல்லை. நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு போன்ற பரிசோதனைகளே இதற்கும் செய்யப்படுகின்றன.

தைராய்டு, இதயம், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, மனச் சோக நோய் உள்ளதா, ஏதாவது கட்டிகள் உள்ளனவா எனப் பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளையணுக்கள், மூளை எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகளும் செய்வதுண்டு.

பலருக்கு மனச் சோக நோய் இருக்கும். எதிலும் ஆர்வமின்மை, படுக்கையில் இருந்து எழுந்திருக்க விருப்பம் இல்லாமை, சாப்பாட்டில் விருப்பமின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற செயல்களைச் செய்வார்கள்.

இவர்களுக்கு வாதத்தைத் தணிக்கிற சிகிச்சைகள் முக்கியமானவை. லகுவான கஞ்சி வகைகளில் சுக்கு சேர்த்துக் கொடுக்கலாம். தூங்குவதற்கு முன் தலைக்கும், காலுக்கும் கொம்பரக்கு எண்ணெய் தேய்த்த பின் தூங்கலாம். தலையில் எண்ணெய் ஊற்றும் தாரை சிகிச்சை செய்ய வேண்டும். சிற்றரத்தை, குறுந்தட்டி, நாயுருவி, அஸ்வகந்தா போன்ற கஷாயங்களைக் கொடுத்து அலுப்பைக் குறைக்க வேண்டும்.

மனதுக்கு வல்லாரை, சங்குபுஷ்பி, கல்யாணப் பூசணி, வாலுலுவை, நீர்பிரம்மி, வெண்தாமரை போன்ற சூரணங்களைக் கொடுக்க வேண்டும். அதிகமான அசதி நோய் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேச வேண்டும்.

மென்மையான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அதிக அசதியால் அவதிப்படுபவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும், ஒய்வையும், தூக்கத்தையும் முறைப்படுத்தவேண்டும்.

ஒரு பெரிய வேலையை, சிறிது சிறிதாகப் பிரித்துச் செய்வதற்குப் பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது.

இவர்களுக்கு பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம், தான்வந்தரத் தைலம் போன்ற எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

சிலருக்குச் சோகம், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையால் ஏற்படுகிறது. மனம் விட்டுப் பேசுவதால், இதைப் படிபடியாகக் குறைக்க முடியும்.

கிராம்பு, நிலவேம்பைச் சம அளவு எடுத்துத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.

ஒரு டம்ளர் அன்னாசிப் பழச் சாற்றுடன் மிளகுத் தூள் சேர்த்துத் தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

அக்கரகார சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து, அத்துடன் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து, வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் அசதி குறையும்.

முருங்கை ஈர்க்கைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் கஷாயம் செய்து குடிக்க அசதி நீங்கும்.

மிளகை நெய்யில் வறுத்துத் தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்

வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டுவர அசதி குறையும்.

புதினாவைச் சுத்தம் செய்து காயவைத்து இடித்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கஷாயம் செய்து சாப்பிட்டுவந்தால் உடலில் அசதி குறையும்.

கேரட்டைச் சுத்தம் செய்து அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் அசதி குறையும்.

மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய் தலா 10 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இடித்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் 2 வேளை சாப்பிட்டுவந்தால், உடல் அசதி குறையும்.

செங்கரும்புச் சாறு 100 மி.லி., எலுமிச்சைச் சாறு 30 மி.லி. ஆகியவற்றுடன் சீரகப் பொடியைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் அசதி குறையும்.

கோதுமையைத் தண்ணீர் விட்டு இரவில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கோதுமை முளை விட்டு இருக்கும். அதை வெயிலில் உலர்த்திப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் அதிமதுரம், நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.

இந்துப்பு, மிளகு, பொடுதலைக் காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு 1ஃ4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் அருந்திவந்தால் உடல் அசதி குறையும்.

கோபுரம் தாங்கிச் செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்துக் காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் சோர்வு குறையும்.

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending