Connect with us

Home

உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் வெந்தயத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

Published

on

இட் அது பட் ஆனால் வாட் என்ன மீனிங் அர்த்தம்? என்ற கேள்விக்கு எதிர்கேள்வியாக வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? என்று கேட்பர். இது சிறுவர்களிடையே அந்த காலத்தில் நடக்கும் புத்திக்கூர்மையான விளையாட்டு.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், முதல் கேள்வியை உற்று நோக்குங்கள். அதற்கு பதில் அடுத்தடுத்த வார்த்தைகள் தான். ஆங்கிலத்தில் இட் என்றால் தமிழில் அது. பட் என்றால் ஆனால்….இப்படியே போகும்.

2வது கேள்வி தான் தமிழில் ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. அதாவது வெங்காயம் என்றால் வெண்மையான காயம். நம் காலிலோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியிலோ ஒரு காயம் வெண்மை நிறத்தில் மாறி விட்டால் அது ஆறி விட்டது என்று அர்த்தம்.

அப்போது தயம் என்றால் கட்டு என்று பொருள். வெந்தயம் என்றால் வெண்மை நிற துணியால் போடப்படும் கட்டு. இந்த கட்டு அப்போதைக்குத் தேவையில்லை என்று பொருள்.

இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் வெந்தயம் என்ற வார்த்தை எங்கெல்லாம் வருகிறது என்று பாருங்கள். சரி தற்போது மேட்டருக்குச் செல்வோம். இந்த வெந்தயத்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று பார்ப்போமா?

ஒரு நாள் முன்னதாகவே டம்ளரில் நீர் ஊற்றி அதில் வெந்தயம் போட்டு ஊற வைக்க வேண்டும். காலை எழுந்ததும் அதை எடுத்துக் குடித்துவிட்டு வெந்தயத்தை சாப்பிட்டால் நமக்கு உடலில் இருக்கக்கூடிய உஷ்ணம் தணிந்து விடும்.

வெந்தயத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா என்றால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னென்ன சத்துகள் உள்ளன என்று பாருங்கள்.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் அடங்கியுள்ளன.

வெந்தயத்தில் உள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியைத் தருகிறது. அது மட்டுமல்லாமல் கருமை நிறத்தையும் தருகிறது. கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வெந்தயத்தில் இருந்து ஈதரை பயன்படுத்தி சாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும், சமையலிலும் பயன்படுகிறது.

மேலும் வெந்தயத்தில் இருந்து ஒரு மணம் உடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட் போன்ற நறுமணமிக்க வாசனைத் திரவியங்களுக்குப் பயன்படுகிறது.

வெந்தயத்தில் இருந்து ஒரு வகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்படுகிறது. இது துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க என்று பல வழிகளில் பயனாகிறது.

வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசையானது நூற்பு ஆலைகளுக்கும், அச்சுத் தொழில்களுக்கும் கூட பயன்படுகிறது.

வெந்தயமானது குளிரச்சியைத் தரும். சிறுநீரைப் பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியை அகற்றும் தன்மையும் கொண்டது. விதையில் உள்ள ஆல்கலாய்டுகள் பசியை அதிகரிக்கும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

வெந்தயத்தை வறுத்து நீர் விட்டு காய வைத்து விடுங்கள். அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று கடுப்பு தீரும்.

வெந்தயத்தை நெய்யில் வறுத்துப்பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் திடீர் என ஏற்படும் வயிற்று வலி ஓடிப்போய் விடும்.

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம் சீதபேதி, மூலநோய் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. மேலும் முடி உதிர்தல், தோல் நோய், வாயுத்தொல்லை ஆகியவற்றைப் போக்குகிறது.

எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக என வெவ்வேறு விதமாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது.

யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூலநோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

20 கிராம்வெந்தயத்தை வறுத்து இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள். ஒரு நாள் நான்கு முறை இந்த உருண்டையை சாப்பிடுங்கள். சீத பேதி அகலும்.

வெந்தயத்தை இளநீரில் ஊற வையுங்கள். பின்னர் அரைத்து குடிங்க. இப்போது சீத பேதி கடுப்பு நீங்கும்.

மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். வாய்வு, பொருமல் நீங்கும்.

வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூசுங்கள். பரு மறைந்து விடும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நெய் இட்டு வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை சாப்பிடும்போது உணவுடன் சிறிது கலந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்று வலி நீங்கும்.

இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து விட வேண்டும். காலையில் அரைத்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போய்விடும்.

கணைச்சூட்டுக்கும் வெந்தயம் உதவுகிறது. எப்படி என்று பாருங்கள்.
வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும். 20 கிராம் வெந்தயம், 50 கிராம் வெங்காயம் எடுத்து 1/2 லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து வடிகட்டி பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு தொடர்ந்து 20 நாட்கள் காலை வேளையில் மட்டும் குடித்து வாருங்கள். கணைச்சூடு இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

100கிராம் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். மாதவிடாய் வயிற்று வலி உள்ளவர்களுக்கு அவர்கள் தொல்லை நீங்கும். இடுப்பு வலியும் போகும்.

பலமிக்க காலை உணவை நாம் வெந்தயம் கொண்டு தயாரிக்கலாம். எப்படி செய்வது என்று பார்ப்போமா?

தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் வெந்தயம் சேருங்கள். இப்போது தோசையை சுட்டுப் பாருங்கள். நிறமாக இருக்கும். இதை சாப்பிடும்போது உடல் பலம் பெருகும்.

200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து மீண்டும் இளநீரில் ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி கற்கண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிட்டதும் ஒரு கரண்டி சாப்பிட்டு வெந்நீர் அல்லது பால் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 40 நாள் சாப்பிட உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயம், கற்பூரம் போட்டு ஊற வைத்து தேய்த்துக் குளிங்க. இப்போது உங்களுக்கு பேன், பொடுகு தொல்லை நீங்கும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளிங்க. இப்போது பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு ஆகியவற்றை இரவு ஊற வைத்து கலையில் அரைத்து உடலில் தேய்த்துக் குளிச்சிப் பாருங்க. கற்றாழை நாற்றம் இருந்தால் நீங்கி விடும்.

இதை தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி உதிராது. கண்ணில் குளிர்ச்சி உண்டாகும். மொத்தத்தில் தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு அரிப்பு தொல்லை வரவே வராது.

வெந்தயக்களியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். வெந்தயத்தை மாவாக்கி இனிப்புக்கு கருப்பட்டியைச் சேர்த்து களி போல கிளறி சாப்பிட்டு வாருங்கள். உடல் சூடு குறையும்.

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending