Connect with us

Recipes for kids

இதுதான் வரகரிசி கொழுக்கட்டை..!

Published

on

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துணவு அவ்வப்போது கொடுத்து வர வேண்டும். அதுவும் வளர் இளம்பருவத்தினருக்கு இத்தகைய ஊட்டச்சத்து மிகவும் அவசியம். அப்போது தான் அந்தந்த வயதில் சுரக்க வேண்டிய ஹார்மோன்களும் ஒரே சீராக சுரக்கும்.

உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்போதுதான் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அனைத்து உறுப்புகளும் ஒரே சீராக இயங்கும். உடற்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். இளம் சிறார்களில் ஒரு சிலர் சோம்பலாகவும், ஒரு சிலர் சுறுசுறுப்பாகவும் நடந்து கொள்ள இத்தகைய உணவுப்பழக்க முறைகளே காரணம்.

அதனால், ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை அடிக்கடி கொடுத்து வாருங்கள். அந்த வகையில் இந்த வரகரிசி கொழுக்கட்டை ரெசிபியை செய்து பாருங்கள்.

என்னென்ன பொருள்கள்

வரகரிசி – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படி செய்வது?

வரகரிசியை மிக்சியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெயை விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்க வேண்டும். அதனுடன் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.

பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். அதனுடன் அரைத்த வரகரிசி ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, கிளறி மூடி போட்டு வேகவிட வேண்டும். நன்கு வெந்ததும் இறக்கி ஆறவிட வேண்டும்.

பிறகு, ஆறிய கலவையைக் கையால் பிடி கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.

வரகுக்குப் பதிலாக சாமை, குதிரைவாலி அரிசியிலும் இது போன்று சுவையான கொழுக்கட்டைகளைச் செய்யலாம்.

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Entertainment

ஆரோக்கியம் மேம்பட அருமையான டிப்ஸ்கள்

Published

on

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவர். கடவுளிடம் சென்று கும்பிட்டு முறையிடுவதும் இதைத்தான். தேக ஆரோக்கியம் தான் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்.

நாம் பெற்ற இன்பத்தை ஒரு நாலு பேருக்கு பகிர்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையே நம்மால் உருவாக்க முடியும். இப்போது விஷயத்துக்கு வருவோம். ஆரோக்கியமாக இருக்க அப்படி என்னென்ன அருமையான டிப்ஸ்கள் உள்ளன என்று பார்க்கலாமா…

தினமும் அதிகாலையில் துயில் எழுவதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை விஷயம்.
அடுத்து நாம் சாப்பிடும் அன்றாட உணவை முறைப்படி குறித்த நேரத்தில் சாப்பிட்டு வரவேண்டும்.

வாய் ருசிக்காக சாப்பிடாமல் நாம் சாப்பிடும் உணவு சத்தானதா என்று அறிந்து சாப்பிட வேண்டும். துரித உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உணவில் கீரையானது வாரத்திற்கு குறைந்தபட்சம் 4 நாள்களாவது அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கால்சியம் பற்றாக்குறையைத் தவிர்க்க முருங்கைக்கீரை, சாத்துக்குடி, மாதுளை, பப்பாளி ஆகியவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

மூச்சுப்பயிற்சி மிக மிக அவசியம். தினமும் ஒரு 5 நிமிடமாவது காலை, மாலை என இரு வேளைகளில் இந்தப் பயிற்சியை கட்டாயம் செய்து வர வேண்டும்.

வெறும் துளசி இலையை சாப்பிட்டாலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், சளி, இருமல் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

பசித்ததும் புசி என்று சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதனால் நன்றாக பசித்த பின்னரே சாப்பிட வேண்டும்.

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும்.

தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து வர வேண்டும். உதாரணத்திற்கு ஏசியில் வேலை பார்ப்பவர்கள் 3 லிட்டருக்கு மேல் குடிக்கக்கூடாது. வெயிலில் நின்று கட்டட வேலை செய்பவர்கள் 3லிட்டருக்கு மேல் குடிக்க வேண்டும். இவர்கள் இதைச் செய்யத் தவறினால் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.

தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 1 மணி நேரமாவது உடல் உழைப்பு முக்கியம்.

பொதுவாக மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கும் இதுவே அவசியமாகிறது. இரவுப்பணி ஆபத்தில் தான் முடியும். பகலில் தூங்கி விடலாம் என நினைக்கக்கூடாது. இரவு உறக்கம் சரியாக இல்லை எனில் கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்கள் வரும். அதனால் தினமும் இரவு 9 மணிக்கு படுக்கைக்குச் சென்று விட வேண்டும். அப்போதுதான் அதிகாலை எழ முடியும்.

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி வந்து விட்டால் அடிக்கடி மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதைத் தவிர்த்து (முடியாத பட்சத்தில் சாப்பிடுவது தவறல்ல.) உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

நமது உடலுக்கு பசி, தாகம் உண்டாவது போல் அசதியும் உண்டாகும். அப்போது ஓய்வு தர வேண்டியது உங்கள் கடமை.

Continue Reading

Entertainment

தித்திக்கும் தீபாவளி இனிப்பு இதுதாங்க…!

Published

on

தீபாவளி பண்டங்களில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது சுசியம் தான். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதை எப்படி செய்வது என்று தான் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

இப்போதெல்லாம் தீபாவளி பலகாரம் என்றாலே வீட்டில் செய்வதற்கு எரிச்சல்பட்டு, மொத்தமாக கடையில் ஆர்டர் கொடுத்து எளிதில் வாங்கி விடுகிறார்கள். என்ன தான் கடையில் வாங்கி அதை சாப்பிட்டாலும் அது கடை பண்டம் தானே தவிர தீபாவளி பலகாரம் இல்லை.

வீட்டில் இந்த சுவீட்டான சுசியத்தை நீங்களே எப்படி செய்வது என இதைப் பார்த்து தெரிந்து கொண்டு செய்யுங்க. அதன் சுவையே அலாதியானது. அது எப்படி என்று பார்க்கலாமா..

என்னென்ன பொருள்கள்

கடலை பருப்பு – 1 கப்
மைதா மாவு – 3/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
வெல்லம் – 3/ 4 கப்
தேங்காய் – ஒரு முறி
பாமாயில் – கால் லிட்டர்

எப்படி செய்வது?

முதலில் கடலைப்பருப்பை நல்லா கழுவுங்க. அதை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி நல்லா ஊற வைங்க. பின்னர் தண்ணீரை வடிகட்டி கடலைப்பருப்பை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நல்லா மூடி விடுங்க.

இப்போது 4 விசில் வரும் வரை வேக விடுங்க. குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து பருப்பை ஒண்ணுரெண்டாக கை விரல்களால் மசித்துக்கோங்க.

தொடர்ந்து தேங்காயைத் துருவி வைங்க. இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முக்கால் கப் வெல்லத்தைப் போட்டு அதில் கால் கப் தண்ணீர்; ஊற்றி நல்லா கொதிக்க விடுங்க. வெல்லம் நல்லா கரைந்ததும் ஆற விடுங்க.

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த கடலை பருப்பு, வெல்லக்கரைசல் ஆகியவற்றை சேருங்க. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வெல்லக்கரைசலை சேர்க்கும் போது அதைக் கொஞ்சம் துணியில் வடிகட்டிக் கொள்ளுங்க.

இப்போது கடலைப்பருப்பும், வெல்லக்கரைசலும் நல்லா கலந்ததும் கெட்டியான பதத்திற்கு வரும் போது அதனுடன் கடலை மாவை சேருங்க. இப்போது நல்லா கிளறி விட்டு அடுப்பை அணைத்து வைங்க.

இனி எல்லாமே ஈசி தாங்க. ஒரு கப் மைதா எடுங்க. 2 சின்ன கரண்டி உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசை மாவு மாதிரி பிசைங்க. பின்னர் ஏற்கனவே கலந்து வைத்துள்ள கடலை மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைங்க. அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைங்க. பாமாயிலை ஊற்றுங்க.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக மைதா மாவில் தோய்த்துப் போடுங்க. இப்படி நாலு அஞ்சு என போடுங்க. நல்லா சிவந்து காய்ந்து வந்ததும் அதைக் துளைகள் உள்ள கரண்டியால் எடுங்க. இப்போது சூடான சுவையான சுசியம் ரெடி..!

Continue Reading

Trending