Connect with us

Home

இஞ்சியின் அற்புத மருத்துவ குணங்கள்…!

Published

on

இஞ்சியை அரைத்து சாறெடுத்துக் குடித்தால் நமக்கு ஜீரணக்கோளாறு பிரச்சனை, வாயுத்தொல்லை தீர்ந்து விடும்.

இது கிராமப்புறங்களில் உள்ள தாய்மார்கள் மறக்காமல் குழந்தைகளுக்குத் தருவதுண்டு. குழந்தைகளும், சிறுவர்களும், பெரியவர்களும் இதை வாரம் ஒருமுறை குடித்துவரலாம். உரப்பு அதிகமாக இருக்கும்.

சிறுவர்கள் குடிக்க அடம்பிடிப்பர். இருந்தாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே மடக்காக ஊற்றி விட்டால் போதும். உங்கள் உடல் ரீப்ரஷ்ஷாகி விடும். இது பாரம்பரியமிக்க உணவு. கி.மு.4ம் நூற்றாண்டிலேயே சீனாவில் இஞ்சியை வயிற்று உபாதை, சுவாசப் பிரச்சனைகளுக்கு மருந்தாகக் கொடுத்துள்ளனர்.

இந்தியாவிலும் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அற்புதமான மருத்துவக் குணங்கள் என்னென்ன என்று பார்ப்போமா…!

உடல் தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய ஊட்டச்சத்துகளை மேம்படுத்துகிறது. மேலும், இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

இத்தகைய அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி 5000 வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்..இஞ்சி தான். இது ஒரு சிறந்த ஜீரண ஊக்கி. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.

முழு உணவிற்குப் பின், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும்போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சனிங் தவிர்க்கப்படுகிறது.

நாட்பட்ட அஜீரணக் கோளாறான டைஸ்பெப்ஸ்யாவிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்குவதோடு, பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது.

இஞ்சி பயணங்களின் போது வரும் வாந்திக்கு நிவாரணம்…தருகிறது. குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைநேர உபாதை, பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி கீமோதெரபிக்கு முன்னதாக தினமும் 0.5 முதல் 1 கிராம் அளவிற்கு இஞ்சி சேர்த்துக் கொண்டு வரும் நோயாளிகளில் 91% பேருக்கு குமட்டல் வாந்தி போன்ற பாதிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதைக் காண முடிந்தது.

அதோடு அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது. இஞ்சியிலுள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருந்து. இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

மேலும், பல அறிவியல் ஆய்வின்படி, மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது.

உடற்பயிற்சியின்போது ஏற்படும் சுளுக்கு, தசைவலி போன்றவற்றை குறைக்க இஞ்சி உதவுகிறது.

மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணத்தை இஞ்சி தருகிறது.

இஞ்சி ப்ராஸ்டாக்ளான்டின்ஸை தடுப்பதன் மூலம் மைக்ரேனில் செயல்புரிகிறது. தசை இறுக்கத்தை தளர்த்தி, ரத்த குழாய்களில் பாதிப்பை கட்டுப்படுத்துவதோடு சில ஹார்மோன்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்குள்ளாக ஆரம்பிக்கும்போது இஞ்சி டீ குடிப்பதால் தீவிர வலியைத் தடுக்க முடிவதோடு அதன் பக்கவிளைவுகளான குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை தடுக்கமுடியும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது.

புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது. நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இஞ்சி பெருங்குடலிலுள்ள வீக்கங்கள் மற்றும் புற்றுநோயின் மீது செயல்பட்டு பாதிப்பைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சியிலுள்ள மூலப்பொருட்கள் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கட்டிகள் மற்றும் கணையப் புற்றுநோய் ஆகியவற்றிலும் நல்ல பலனை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending