Connect with us

Home

அழகு… நீ நடந்தால் நடையழகு! நீ சிரித்தால் சிரிப்பழகு!

Published

on

அழகு மனித இனத்தின் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது. கருப்போ, சிவப்போ கொஞ்சம் களையா இருந்தா போதும் என பெண் பார்க்கும் போது பேசுவர்.

அதையேத் தான் ஒரு பெண்ணும் எதிர்பார்க்கிறாள். அதனால், நாம் கொஞ்சம் நமது ஸ்டைலை மாற்றி அமைக்க வேண்டுமானால் அழகு விஷயத்தில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.

அழகுடன் நம் உடல் நலம் பேண என்னென்ன செய்வது என்று பார்ப்போமா?

நாம் முகத்தில் கொடுக்கும் அழகுக்கான கவனத்தை நகத்தில் ஒரு போதும் கொடுப்பதில்லை. ஒரு சிலர் நகத்தை வெட்டக் கூட நேரமில்லாமல் அழுக்காகவும், நீள நீளமாகவும் அருவருக்கத் தக்க வகையில் வளர்த்து இருப்பார்கள்.

நம் எதிரில் இருப்பவர்கள் கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் நாம் உடல் நலனில் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை நம் நகத்தைக் கொண்டே கண்டறிந்து விடுவர். அதனால் நகத்தில் தினமும் அக்கறை செலுத்துங்க.

தினமும் பாலுடன் சிறிதளவு பேரீச்சம் பழத்தைக் கலந்து குடித்து வாங்க. நகங்கள் பலமாகி விடும். நகம் உடையாது. பாதாம் எண்ணெயை தடவினா நகம் இன்னும் பளபளப்பாகும்.

இதழ்கள் பளபளப்பாகவும் சிவப்பாகவும் இருந்தால் தான் பெண்களுக்கு அழகு. அதற்கு எளிய முறையில் ஒரு குறிப்பு உள்ளது. லிப்ஸ்டிக் போடுவதால் வரும் சிவப்பு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

அதனால் பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை லேசாக சீவிக் கொண்டு லிப்ஸ்டிக் போல போட்டுக் கொண்டால் போதும். உங்கள் சிவப்பழகுக்கு பீட்ரூட் கைகொடுக்கும்.

முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விடும்.

பப்பாளி பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் காய விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடியில் பாருங்கள். உங்கள் முகம் பளபளப்பாக மின்னும்.

கழுத்தழகுக்கு சிறிது ரோஸ் வாட்டர், வெங்காய சாறு, ஆலிவ் ஆயில் கலவை போதும். கொஞ்ச நேரம் மசாஜ் பண்ணி விட்டால் கருப்பாக உள்ள கழுத்துப்பகுதி நிறம் மாறி பளபளப்பாகி விடும்.

அவரி இலையை நன்கு காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் தினமும் 5 கிராம் எடுத்து காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் போதும். உடல் பளபளப்பாகி விடும்.

கண்களில் உள்ள கருவளையம் நீங்க சிலர் என்னென்னவெல்லாமோ செய்து பார்ப்பார்கள். ஒன்றும் பலனளிக்காது. அதனால் தேவையற்ற அலர்ஜி ஏற்படுவது தான் மிச்சம். அதற்கு சிறந்த வழி இதுதான்.

வெள்ளரிக்காய் விதையை காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து பசை போல் ஆக்குங்கள். இந்த பசையை முகத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் ஒரே மாதத்தில் கருவளையம் மாயமாகி விடும்.

சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே கருப்பு திட்டுகள் இருக்கும். பார்க்கவே சகிக்காது. அப்படிப்பட்டவர்கள் முகத்தையும் ஜொலிக்க வைக்கலாம். என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் விட்டு நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பசையை பற்று போல் முகத்தில் உள்ள கருப்பு திட்டுகளில் போடங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் போதும். அந்த திட்டுகள் மறைந்து முகம் அழகாகி விடும்.

ஆண்களில் ஒரு சிலருக்கு மீசை தாடி வளரவே வளராது. வளர்ந்தாலும் மெதுவாகவே வளரும். அது வேகமாக வளர இந்த எளிய முறையை செய்து வந்தால் போதும்.

இரவு தூங்கும் முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த ஆவியை பிடிங்க. அப்புறமா முகத்தை நல்லா கழுவிட்டு சுத்தமா டவலால துடைச்சிருங்க.

ஆமணக்கு எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் நன்றாக மசாஜ் போல தேய்த்து வந்தால் போதும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் மீசை, தாடி வளர ஆரம்பித்து விடும். ஆமணக்கு எண்ணைக்குப் பதிலாக கருஞ்சீரகம் எண்ணை அல்லது விளக்கெண்ணையை தடவலாம்.

அதே போல ஆமணக்கு எண்ணெயையும் ஆலிவ் எண்ணெயையும் கலந்தும் தடவலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுலபமான வழி ஒன்று உள்ளது. சின்ன வெங்காயத்தின் சாற்றை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் போதும். விரைவில் மீசை தாடி வளர்ந்து விடும்.

 

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending