Connect with us

Home

அடிக்கடி தலைவலி தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்?!

Published

on

சிலருக்கு எப்போதும் தலைவலி வந்து தொல்லை படுத்திக் கொண்டே இருக்கும். போதும்டா சாமி ஏன்டா பொறந்தோம் என்ற லெவலுக்குப் போய் விடும். அப்படி இப்படி என உருண்டு புரண்டு படுப்பார்கள். எந்த பிரயோஜனமும் இருக்காது. தூக்கம் வரும். ஆனால்…வராது. அப்படி ஒரு ரெண்டுங் கெட்டான் நெலைமை.

அதுதான் இந்த தலைவலி. இவர்கள் அமிர்தாஞ்சன், ஜண்டுபாம், விக்ஸ் என எத்தனை எத்தனை மருந்துகளைத் தேய்த்தாலும் அது அப்போதைய தீர்வைத் தான் தரும். நிரந்தர தீர்வு என்றால் அது சித்த வைத்தியத்தில் தான் உள்ளது. இது கொஞ்சம் லேட் ஆகும். அவ்ளோதான்..

நமக்கு எப்போதுமே எல்லாமே உடனே நடந்து விட வேண்டும் என்ற ஆசை தான். அதனால் தான் நிறைய மருந்துகளை அதிக விலைக்கு வாங்கி நாம் எதுவும் கேட்கவில்லை என ஏமாந்து போகிறோம். மனதளவிலும் விரக்தி அடைகிறோம்.

இக்காலத்தில் உடல்நலனில் அக்கறை கொள்வது என்பது மிக மிக அத்தியாவசியமான தேவையாகி விட்டது. ஏனென்றால் காற்று மாசுபாடு. நீர் மாசுபாடு. நில மாசுபாடு என எங்கு பார்த்தாலும் சுகாதார சீர் கேடு.

நாம் இந்த சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறோம். அதில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தே ஆக வேண்டும். பெரும்பாலான நோய் நம்மை எளிதில் தொற்றிக் கொள்ள காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை தான்.

அதனால் முதலில் நாம் நோய் எதிரப்பு சக்திக்கு என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக என்னென்ன பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு புகைபிடிப்பது, மது அருந்துவது ஆகிய பழக்க வழக்கங்களுக்கு ஒரு சிலர் அடிமையாகி இருப்பர். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ஒருபுறம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை சாப்பிட்டு வருவர்.

மறுபுறம் இதுபோன்ற போதைப்பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி இருப்பர். அவர்கள் விரும்பினாலும் கூட அவர்களால் அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பர்.

அதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும்.

புகை மற்றும் காற்று மாசுபாடான இடங்களில் நீண்ட நேரமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மழை, பனி காலங்களில் தலைக்கு பாதுகாப்பாக ஏதாவது அணிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் பைக்கில் நீண்ட நேரம் பயணம் செய்வர். இவர்கள் உயிர்காக்கும் ஹெல்மட்டைக் கூட அணிவதில்லை.

இன்னும் ஒருசிலர் எல்லாவற்றிலும் அவசர அவசரமாக இருப்பார்கள். இவர்கள் தான் குளித்து விட்டு அவசரமாக புறப்படுகிறேன் என்று தலையைக் கூட சரியாகத் துவட்ட நேரம் இல்லாதவர்கள். இதன்காரணமாக தலையில் நீர்கோர்த்துக் கொண்டு தலைவலி வந்து பாடாய்படுத்துகிறது.

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் இந்தப்பிரச்சனை அதிகம். ஏனென்றால் அவர்களுக்குத் தான் தலைமுடி அதிகமாக இருக்கும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்லவேக் கூடாது.

நாம் எப்போதும் டீ, காபியை புத்துணர்ச்சிக்காக பருகி வருகிறோம். இதற்குப் பதிலாக சுக்குக்காபி, இஞ்சி டீயைப் பருகினால் உடலுக்கு நன்மை பயக்கும்.

தலைக்குக் குளித்த பின்னர் தலையை குறைந்தது 5 நிமிடமாவது காய்வதற்கு ஒதுக்க வேண்டும். தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்குத் தான் சளி தொல்லையும் வருகிறது.

இதனால் ஆரம்பத்திலேயே அந்தப் பிரச்சனையைக் கண்டறிந்து கிள்ளி எறிந்து விட்டால் தலைவலி என்பது நம்மை நெருங்கவே நெருங்காது.

தலையில் அதிகமாக நீர் தங்குவதால் தான் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற வியாதிகள் படையெடுக்கின்றன.

இவர்களுக்கு சரியான தூக்கம் மிகவும் அவசியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி சாறெடுத்து நெற்றியில் பற்று போடலாம்.

திருநீற்றுப் பச்சிலைச்சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவினால் தலைவலி பறந்து போய்விடும்.

துளசி மற்றும் வேப்பிலை போட்டு ஆவி பிடிக்கலாம். இதனால் இறுகிப்போன சளியானது இளகி வெளியேறும்.

துளசி இலைகளோடு சுக்கு, லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.

வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசலாம்.

இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்று போடலாம்.

சுக்குப்பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவலாம்.

எலுமிச்சைப்பழச்சாற்றை காய்ச்சி நெற்றியில் பற்று போடலாம்.

காலை எழுந்ததும் உப்பு கலந்த நீரால் வாய்க் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் படுமாறு வைத்துக் கொப்பளித்தால் சளி உடனே வெளியேறி விடும். இது தலைவலி தீர உடனடி நிவாரணம் ஆகும்.

 

 

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending