Connect with us

Home

அடடே…மிளகின் மருத்துக்குணங்கள் இவ்வளவு இருக்கா…?

Published

on

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்னு சொல்வாங்க. அந்த அளவுக்கு மிளகுல விஷத்த முறிக்கக்கூடிய தன்மை இருக்கு. அதனால தான் அப்படி சொன்னாங்க நம்ம பெரியவங்க.
பகைவன் வீட்டிற்கு நாம போகப்போறதில்ல.

இருந்தாலும் நமக்கே தெரியாமல் மனதிற்குள் பகை வைத்துக் கொள்ளும் உறவுக்காரர்களும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள். அதாவது வெளியே முகம் சிரித்த மாதிரி இருக்கும்.

மனதிற்குள் நம்மைப் பற்றி பொறாமை, கோபம், அகங்காரம் என எல்லாம் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கும். அப்பேர்ப்பட்டவர்கள் நம்மை சமயம் பார்த்து காலை வாரி விடக்கூட தயங்க மாட்டார்கள்.

அதனால் தான் பகைவன் வீட்டிற்கு போகும் போது 10 மிளகைக் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் உணவைத் தந்ததும் நாம் வெற்றிலைப்பாக்கு போடுவதைப் போல மிளகை சாப்பிட்டு விட வேண்டியதுதான்.

இது உங்கள் உடலுக்குள் என்ன விஷம் போய் இருந்தாலும் முறித்து விடும். அவ்வளவு சக்தி வாய்ந்தது தான் இந்த மிளகு. சரி. இப்போது மிளகின் மருத்துவக்குணங்கள் என்னென்ன என்று பார்ப்போமா…

தினமும் பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்த்து வரும்போது பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.

வாதத்தை அடக்குகிறது. நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. உடல் உஷ்ணத்தைப் போக்குகிறது.

பசியின்மை, செரியாமை போன்ற குறைபாடு உள்ளவர்கள் 5 மிளகை சாப்பிட்டால் போதும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய பிரச்சனைகளுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி சூரணத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இந்த சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனை, அஜீரணக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து.

சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்து.

சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோடு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.

உடல் சூட்டினால் வரும் இருமலுக்கு மிளகு நல்ல தீர்வாகிறது.

உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி, நஞ்சுகள் நீங்க 10 மிளகுடன் வெற்றிலை, அருகம்புல், 1 கைப்பிடி இடித்து குடிநீரில் போட்டு குடிக்க வேண்டும்.

பூரான் கடித்தவுடன் பயந்து விட வேண்டாம். 180 மில்லி வெற்றிலைச்சாறுடன் 35 கிராம் மிளகை சேர்த்து நாள் முழுவதும் ஊற வைத்து விட வேண்டும். பின்னர் இந்த மிளகை எடுத்து உலர்த்தி விட்டு பொடிசெய்து விட வேண்டும். இந்தப் பொடியை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

பூரான் கடித்து விட்டால் இந்தப்பொடியை 2 வேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து குடித்து விட வேண்டும். பூரான் கடியால் ஏற்பட்ட விஷம் அகலும். இந்த மருந்திற்கு பத்தியம் உண்டு. உப்பு, புளி இல்லாத உணவாக சாப்பிட்டு வருவது முக்கியம்.

சிலருக்கு தலையில் ஒரு சில இடத்தில் முடி இல்லாமல் இருக்கும். கேட்டால் புழு வெட்டு என்பர். அவர்களுக்கு மிளகு, வெங்காயம், உப்பு ஆகியவற்றை அரைத்து அந்த இடத்தில் பூசி வர வேண்டும். தலைமுடி முளைத்து விடும். அதனால் புண் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெய் தடவினால் போதும். புண் ஆறிவிடும்.

தினமும் உணவில் மிளகு ரசம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும. மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கும்.

மிளகு பொடியை தேனுடன் கலந்து தினமும் 2 வேளை சாப்பிடுங்கள். ஞாபகசக்திக்கு சிறந்த மருந்து. உடல் சோர்வு, சளி தொல்லைகளும் நீங்கி விடும்.

 

 

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending