Connect with us

Home

அடடா…நெல்லிக்காய் விதையில் இத்தனை நன்மைகளா..?!

Published

on

சாதாரணமாக நாம் சிறிய நெல்லிக்காயைத் தான் உப்பு வைத்து சிறுவயதில் சுவைத்திருப்போம். சற்று புளிப்பாக இருக்கும். பெரிய நெல்லிக்காயில் தான் சத்து அதிகம். ஆனால் அது சற்று கசப்பாக இருக்கும். அதை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இவ்வளவு தான் நமக்கு நெல்லிக்காயைப் பற்றி புரிதல் இருக்கும். அந்த நெல்லிக்காயை அம்லா என்றும் கூறுவர்.

இந்த நெல்லிக்காயில் ஏகப்பட்ட மருத்துவக்குணங்கள் உள்ளது. சாதாரணமாக நாம் நெல்லிக்காயை சாப்பிட்டதும் அதன் விதையைத் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதையும் பக்குவப்படுத்தும்போது நமக்கு ஏகப்பட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போமா…

நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தடுக்க உதவுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், பழம் மட்டுமல்ல, அம்லா விதைகள் கூட ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஒரு மூலம். நெல்லிக்காய் விதைகள் பல வழிகளில் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

நெல்லிக்காயின் வலிமையான விதைகளை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சருமத்தில் மேற்பரப்பில் பயன்படுத்தலாம். சிறந்த ஆரோக்கியத்திற்காக தூள் வடிவில் உட்கொள்ளலாம். அதிகப்படியான வெள்ளை யோனி வெளியேற்றம் அல்லது லுகோரோயாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது மிகவும் நன்மையைத் தரும்.

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. ஒரு நெல்லிக்காயில் ஒரு ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. பல ஃபிளாவனோல்கள், ரசாயனங்கள் இதில் உள்ளன. இந்த சிறிய பச்சை பெர்ரிகளில் கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகக் குறைவு மற்றும் வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6, தாமிரம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

ஆரோக்கியத்தின் களஞ்சியம் இந்திய நெல்லிக்காய் என்பர். இது ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தொண்டை வலி மற்றும் குளிர்ச்சியை குணப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் சிக்கல்களை நிர்வகிக்கிறது மற்றும் குறைக்கிறது.

நெல்லிக்காய் விதைகளை மிட்டாய்கள் அல்லது சாறு வடிவில் அவற்றை பச்சையாக சாப்பிடலாம். ஆனால் லுகோரோஹியாவால் பாதிக்கப்படும்போது, தூள் விதைகளை சாப்பிட வேண்டும். இதை சந்தையிலிருந்து பெறலாம் அல்லது வீட்டிலேயே செய்யலாம். நீங்கள் நெல்லிக்காயில் இருந்து விதைகளை எளிதில் பிரித்தெடுக்கலாம். பின்னர் அவற்றை மிக்சியில் அரைத்து நன்றாக பேஸ்ட் செய்யலாம். அதில் தேன் அல்லது வெல்லம் சேர்த்து காற்று புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டும்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி அம்லா விதை விழுது கலந்து நிவாரணத்திற்காக தினமும் காலையில் குடிக்க வேண்டும். லுகோரியா என்பது மணமற்ற, அடர்த்தியான, வெண்மை, மஞ்சள் அல்லது பச்சை நிற யோனி வெளியேற்றம்.

பெரும்பாலும் இது சாதாரணமானது. ஆனால் கடுமையான சந்தர்ப்பங்களில், இது ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு அல்லது நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். யோனி தொற்று காரணமாக வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கலாம் அல்லது அது மறைந்து அவ்வப்போது மீண்டும் தோன்றக்கூடும். நெல்லிக்காய் விதைகள் வீக்கத்தைக் குறைக்கவும் தொற்றுநோயைக் குறைக்கவும் உதவும்.

முக்கியக்குறிப்பு:

நெல்லிக்காயை எப்போது சாப்பிடக்கூடாது? என்று ஒரு நியதி உள்ளது. ரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் மக்கள் சிட்ரிக் பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல எந்த அறுவை சிகிச்சை செய்யபோறவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி, தாய்ப்பால் அல்லது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களும் இதைத் தவிர்க்கலாம்.

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending